Home
Mobile

ஒன்பிளஸ் போன்களின் 'ராஜா' வந்துட்டாரு.. எந்த மாடல்னு தெரியுமா?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் எப்போதும், மிகப்பெரும் வரவேற்பை பெறும் போன்களை ரீபிராண்ட் செய்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. அப்படி, விற்பனையிலும், கேமரா, சிப்செட், டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்களிலும் சக்கைப்போடு போட்ட ஒன்பிளஸ் 11 5ஜி போனின் (OnePlus 11 5G) மார்பில் ஒடிஸி எடிஷனை வெளியிட்டுள்ளது.

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பிரியர்கள் மட்டுமல்லாமல், அனைத்து ஸ்மார்ட்போன் பிரியர்களின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்த போன் என்றால், அது இந்த ஒன்பிளஸ் 11 5ஜி மார்பில் ஓடிஸி எடிஷன் (OnePlus 11 5G Marble Odyssey Edition) மட்டுமே. ஏனென்றால், இந்த போனின் கேமரா, ஆப்பிள் போன்களுக்கு நிகராக இருப்பதாக கூறப்படுகிறது.

ஒன்பிளஸ்

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்த போன், விற்பனையில் மிகப்பெரும் சாதனை படைத்ததால், அதன் புதிய எடிஷன் கூடுதல் அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டது. இதுவொரு லிமிடெட் எடிஷன் என்பதால், எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று பலர் நீண்ட நாள்களாக காத்துக் கொண்டிருந்தனர். இவ்வளவு எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று முதல் (ஜூன் 6) ஒன்பிளஸ் 11 5ஜி மார்பில் ஒடிஸி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

ஒன்பிளஸ் 11 5ஜி மார்பில் ஒடிஸி அம்சங்கள்: இந்த போன் 6.7 இன்ச் (1440 x 3216 பிக்சல்ஸ்) குவாட் எச்டிபிளஸ் (Quad-HD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. அதோடு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது.

ஆண்ட்ராய்டு 13 உடன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2 SoC) சிப்செட் வருகிறது. இந்த சிப்செட் உடன் ஆக்சிஜன்ஓஎஸ் 13 (OxygenOS 13) கொடுக்கப்பட்டுள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதன்படி 50 எம்பி மெயின் கேமரா + 48 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 32 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் வருகிறது.

16 எம்பி செல்பீ கேமரா சோனி ஐஎம்எக்ஸ்471 (Sony IMX471) சென்சாருடன் வருகிறது. 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரோஜ் வசதி உள்ளது. 5,000mAh பேட்டரி 100W சூப்பர்வூக் (SuperVOOC) பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. இந்த ஒன்பிளஸ் 11 5ஜி போனின் விலையை பொறுத்தவரையில் ரூ.64,999 இப்போது வருவிருக்கும் ஒன்பிளஸ் 11 5ஜி மார்பில் ஓடிஸி எடிஷன் ரூ. 3,000 அதிகமாக விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது.

இந்த போனுக்கான வரவேற்பு மிகப்பெரும் அளவில் இருப்பதால், விற்பனையில் சக்கைபோடு போடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 11 5G Marble Odyssey Edition Launched in India With Snapdragon 8 Gen 2 And Marble-Like Finish Here is Full Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X