OnePlus 11 5G: ஒன்பிளஸ் வரலாற்றிலேயே சூப்பர் பவர் போன் இது தான்.! வாய் பிளக்க வைத்த ஸ்பெக்ஸ்.!
இந்த 2023 ஆம் ஆண்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மிக முக்கியமான ஸ்மார்ட்போன் மாடல் என்ற பெருமையை ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 11 சீரிஸ் மாடல் பெறுகிறது. இந்த வரிசையில் நிறுவனம் ஒன்பிளஸ் 11 (OnePlus 11 5G) மற்றும் ஒன்பிளஸ் 11R (OnePlus 11R) ஆகிய இரண்டு மாடல்களை இன்று அறிமுகம் செய்துள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம், February 7ம் தேதி (இன்று) நிகழ்த்திய ஒன்பிளஸ் கிளவுட் 11 நிகழ்வில் நிறுவனம், அதன் புதிய OnePlus 11 5G ஸ்மார்ட்போன் மாடலை ஷேப் ஆஃப் பவர் (Shape Of Power) மற்றும் 'மோஸ்ட் பவர்புல் ஸ்மார்ட்போன் எவர் (Most Powerful Smartphone Ever)' என்று அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு இந்த டிவைஸை நிறுவனம் அதன் சொந்த சந்தையான சீனா ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

OnePlus 11 5G ஷேப் ஆஃப் பவர் இந்தியாவில் அறிமுகம்.!
ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறுகிறது என்று பார்க்கலாம் வாங்க.OnePlus 11 ஆனது, அற்புதமான செயல்பாட்டு அனுபவத்தில் உங்களை மூழ் கடிக்கப்போகிறது. காரணம், இது மிகவும் சக்திவாய்ந்த Qualcomm Snapdragon 8 Gen 2 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மிரட்டலான அம்சங்களுடன் இந்த OnePlus 11 ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 6.7' இன்ச் கொண்ட 1440 x 3216 பிக்சல் கொண்ட 20.1:9 விகிதம் உடைய பெஸ்ட் கிளாஸ் 120 Hz ஃபிலுயிட் AMOLED QHD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே Gorilla Glass 7 பாதுகாப்புடன் வருகிறது. இது Qualcomm Snapdragon 8 Gen 2 சிப்செட் உடன் வருகிறது.
இந்த டிவைஸ் Adreno 740 ஜிபியு உடன் வருகிறது. இது 16ஜிபி RAM Vita LPDDR5X ரேம் உடன் 256ஜிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதனால், ஸ்மூத் போன் அனுபவத்தை லேக் இல்லாமல் அனுபவிக்க முடியும். இந்த புதிய ஒன்பிளஸ் 11 சாதனம் Android v13 வெர்ஷன் உடன் Oxygen OS 13 உடன் வருகிறது. இதில் Dolby Vision and ATMOS அம்சத்துடன் வருகிறது.

தாறுமாறான அம்சங்களுடன் மிரட்டலாக களமிறங்கிய புது ஒன்பிளஸ் 11.!
OnePlus 11 சாதனத்தின் கேமரா அம்சம் பற்றி பேசுகையில் இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 50 MP பிரைமரி சென்சார் + 48 MP போட்ரைட் லென்ஸ் + 32 MP அல்ட்ரா வைட் சென்சார் கொண்ட HASSELBLAD ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இந்த சாதனம் 16 MP கேமராவை கொண்டுள்ளது.
இந்த புதிய ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) ஸ்மார்ட்போனின் பேட்டரி அம்சம் பற்றி பேசுகையில், இது 5000 mAh கொண்ட பேட்டரியை பேக் செய்கிறது. இது 100W Super VOOC பாஸ்ட் சார்ஜிங் அனுபவத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் வழக்கம் போல, இதன் பாரம்பரியமான USB Type-C சார்ஜிங் போர்ட் உடன் வருகிறது. இது 100% சார்ஜ்ஜை வெறும் 25 நிமிடத்தில் நிரப்பும் தன்மை கொண்டதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

OnePlus 11 5G விலை என்ன? எப்போது விற்பனைக்கு வாங்க கிடைக்கும்?
இது புதிய சாதனம் டூயல் நானோ சிம் அம்சத்துடன் 5G, 4G, 3G, 2G, VoLTE, Wi-Fi 7, MIMO, Bluetooth v5.3, GPS, A-GPS, Glonass, NFC, போன்ற பல அம்சங்களை பேக் செய்கிறது. இந்த சாதனத்தின் விலை பற்றி பேசுகையில், OnePlus 11 ஸ்மார்ட்போனின் ஆரம்ப மாடல் இந்தியாவில் 8GB + 256GB ரூ. 56,999 விலையிலும், 16GB + 256GB மாடல் ரூ. 61,999 விலையிலும் வருகிறது. இதன் விற்பனை OnePlus.com வழியாகவும் Amazon.com வழியாகவும் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது.
இதன் ப்ரீ-புக்கிங் இன்று முதல் ஆன்லைனில் துவங்குகிறது. இந்த புதிய OnePlus 11 சாதனத்தின் முதல் விற்பனை பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கிறது. இது டைடன் பிளாக் மற்றும் ஏடெர்னல் க்ரீன் ஆகிய 2 நிறங்களில் வருகிறது. இந்த சாதனம் நான்கு வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், ஐந்து வருட செக்யூரிட்டி பேட்ச் அப்டேட்களையும் பெறுகிறது என்பது சிறப்பான விஷயமாகும்.
அதேபோல், 5ஜி உடன் ஒரு சூப்பர் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சாதனத்தை வாங்க நினைத்தால், கட்டாயம் உங்கள் தேர்வு பட்டியலில் இந்த OnePlus 11 இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








