டைம் ட்ராவல் செய்து வந்த OnePlus 10T Marvel Edition டிவைஸ்.! இந்த தேதிய குறிச்சு வச்சுக்கோங்க.!

|

மார்வெல் அவென்ஜர்ஸ் (Marvel Avengers) திரைப்படத்தின் கிளைமாக்ஸ் போல, கடந்த காலம் சென்று - இப்போது மீண்டும் நிகழ்காலத்திற்கு வருவது போல, ஒன்பிளஸ் நிறுவனமும் கடந்த காலத்தில் வெளியான மார்வெல் அவென்ஜர்ஸ் திரைப்படத்தை இப்போது நிகழ்காலத்தில் நினைவுபடுத்துவது போல, புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஒன்பிளஸ் 11 அறிமுகத்திற்கு முன்னதாக, டிசம்பர் 17 ஆம் தேதி நிறுவனம் அதன் உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவிருப்பதாக டீஸ் செய்துள்ளது - இது OnePlus 10T Marvel Edition என்று பெயரில் வெளிவரவுள்ளது.! OnePlus நிறுவனம் இப்போது இந்த போனின் அறிமுக தேதிகளை டீஸ் செய்திருந்தாலும், வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் விவரங்கள் ஏற்கனவே டிஸ்னியால் வெளியிடப்பட்டுள்ளன.

டைம் ட்ராவல் செய்து வந்த OnePlus 10T Marvel Edition டிவைஸ்.!

இந்தியாவில் OnePlus 10T Marvel Edition ஸ்மார்ட்போன் என்ன அம்சத்துடன்? என்ன விலையில்? என்ன தேதியில் அறிமுகம் செய்யப்படும்? என்பதைப் பார்க்கலாம். இத்துடன், இந்த புதிய OnePlus 10T Marvel Edition போனுடன் அதன் பாக்சில் நிறுவனம் என்னென்ன விஷயங்களைச் சேர்த்துள்ளது என்பதையும் தெரிந்துகொள்ளலாம் வாங்க.!

எப்போதும், ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் என்று வந்துவிட்டாலே அதனுடன் சில சிறந்த ஆக்சஸரீஸ்கள் வழங்கப்படும். அப்படி, வரவிருக்கும் OnePlus 10T மார்வெல் ஸ்பெஷல் எடிஷன் போனுடன் அதன் பாக்சில் பின்வரும் விஷயங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

OnePlus 10T 5G ஸ்மார்ட்போன்
அயர்ன் மேன் மொபைல் கேஸ் (IronMan Mobile Case)
கேப்டன் அமெரிக்கா பாப்-சாக்கெட் (Captain America Pop-Socket)
பிளாக் பாந்தர் ஃபோன் ஸ்டாண்ட் (Black Panther Phone Stand) என்று இந்த சில பிரத்தியேக ஆக்சஸரீஸ்களை நீங்கள் பாக்ஸுடன் வாங்கலாம்.

டைம் ட்ராவல் செய்து வந்த OnePlus 10T Marvel Edition டிவைஸ்.!

OnePlus 10T Marvel Edition போனின் அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த புது ஸ்மார்ட்போன் மூன்ஸ்டோன் பிளாக் வண்ண விருப்பத்தில் வரும். இது Qualcomm Snapdragon 8+ Gen 1 SOC மூலம் இயக்கப்படும். இது 16GB ரேம் மற்றும் 256GB கொண்ட ஸ்டோரேஜ் உடன் சக்தி வாய்ந்த சிப்செட் உடன் இணைக்கப்படும். மற்ற அம்சங்கள் அனைத்தும், நிறுவனத்தின் ஆர்டினரி OnePlus 10T போன்றே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, OnePlus 10T ஆனது 6.7' இன்ச் முழு-HD+ LTPO2 10-பிட் AMOLED பேனலை 120Hz ரெப்ரெஷ் ரேட் வீதம், 950 nits பீக் பிரைட்னெஸ் மற்றும் HDR 10+ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சத்தைக் கொண்டுள்ளது. OnePlus 10T ஆனது OIS ஆதரவுடன் 50MP சோனி IMX766 பிரைமரி சென்சார், 8MP அல்ட்ரா-வைட் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் இது 16MP ஸ்னாப்பரைக் கொண்டுள்ளது.

டைம் ட்ராவல் செய்து வந்த OnePlus 10T Marvel Edition டிவைஸ்.!

முன்பே சொன்னது போல, இது Qualcomm Snapdragon 8+ Gen 1 சிப்செட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது மற்றும் 16GB LPDDR5 ரேம் மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் வழங்கப்படுகிறது. இது 150W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்தியாவில் சாதாரண OnePlus 10T மூன்று ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகிறது. இதன் 8GB+128GB விலை ரூ.49,999, 12GB+256GB ரூ.54,999, மற்றும் 16GB+256GB ரூ.55,999 விலைக்கு கிடைக்கிறது.

இப்போது அறிமுகம் செய்யப்படும் OnePlus 10T Marvel Edition விலை பற்றி பேசுகையில், OnePlus 10T மார்வெல் எடிஷன் 16GB+256GB ஸ்டோரேஜ் மாடலின் விலை இந்தியாவில் ரூ.55,999 விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் OnePlus 10T இன் இந்த ஸ்பெஷல் எடிஷன் டிசம்பர் 17 மற்றும் 19-க்கு இடையில் OnePlus இன் ரெட் கேபிள் கிளப்பில் பிரத்தியேகமாக வெளியிடப்படும்.

Best Mobiles in India

English summary
OnePlus 10T Marvel Edition Smartphone Launch With Special Box Items In India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X