Home
Mobile

முதல் முயற்சி- இன்னும் 4 நாள் காத்திருந்தால் தரமான Oneplus Smartphone வாங்கலாம்!

OnePlus 10T 5G ஸ்மார்ட்போனின் 16 ஜிபி வேரியண்ட் இந்தியாவில் ஆகஸ்ட் 16 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனம் தனது ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் பதிப்பை அறிமுகம் செய்வது இதுதான் முதன்முறை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஒன்பிளஸ் 10டி 5ஜி 16ஜிபி ரேம் வேரியண்ட்

ஒன்பிளஸ் 10டி 5ஜி 16ஜிபி ரேம் வேரியண்ட்

ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.இந்த ஸ்மார்ட்போன் மூன் ஸ்டோன் ப்ளாக் என்ற ஒற்றை வண்ண விருப்பத்தில் கிடைக்கும்.

ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனானது இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் வேரியண்ட்கள் இடம்பெற்றது.இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஆகஸ்ட் 6 முதல் தொடங்கியது.

இந்த நிலையில் புது வேரியண்ட் விற்பனை தேதியை நிறுவனம் அறிவித்திருக்கிறது.

புதிய 16ஜிபி ரேம் வேரியண்ட்

புதிய 16ஜிபி ரேம் வேரியண்ட்

ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் இன் விற்பனை தேதியை நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் வேரியண்ட் இந்தியாவில் ஆகஸ்ட் 16, 2022 மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும் என ஒன்பிளஸ் குறிப்பிட்டுள்ளது.

ஆகஸ்ட் 16 முதல் விற்பனை தொடக்கம்

ஆகஸ்ட் 16 முதல் விற்பனை தொடக்கம்

16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ஒன்பிளஸ்.இன், ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப், அமேசான்.இன் மூலம் விற்பனைக்கு வரும்.

இந்த வேரியண்ட்டின் விலை ரூ.56,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது மூன் ஸ்டோன் ப்ளாக் என்ற ஒற்றை வண்ணத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.

இதைத் தவிர பிற அனைத்து அம்சங்களும் முந்தைய வேரியண்ட்கள் போன்றே இருக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

OnePlus 10T 5G சிறப்பம்சங்கள்

OnePlus 10T 5G சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போனானது பெரிய 6.7 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே உடன் கிடைக்கிறது.

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் சமீபத்திய குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை விட ஒன்பிளஸ் 10டி அதிக ஆற்றலைக் கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் ஆதரவு

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் ஆதரவு

OnePlus 10T 5G ஸ்மார்ட்போன் ஆனது ஹைப்பர் பூஸ்ட் கேமிங் இன்ஜின் ஆதரவைக் கொண்டுள்ளது. இதன் மூலம் துல்லியமான மற்றும் வேகமான கேமிங் அனுபவத்தை பெறலாம்.

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஆக்சிஜன் ஓஎஸ் 13 மூலம் இயக்கப்படுகிறது.

50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா

50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா

ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனானது டூயல் எல்இடி ஃப்ளாஷ் உடனான டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் ஷூட்டர் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமராவைக் கொண்டிருக்கிறது.

அதேபோல் செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

150 வாட்ஸ் சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜ்

150 வாட்ஸ் சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜ்

இந்த ஸ்மார்ட்போனின் மற்றொரு கவனிக்கத்தக்க அம்சம் இதில் உள்ள சார்ஜிங் ஆதரவு ஆகும். முதல் மூன்று நிமிடங்களில் 30 சதவீதம் வரை இந்த ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய முடியும் என கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 150 வாட்ஸ் சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது. அதேபோல் ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 10T 5G smartphones 16GB Variant Sale Start in India on August 16
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X