Home
Mobile

இந்த OnePlus 10T போனுக்காக இந்தியாவே வெயிட்டிங்.! அப்படியென்ன ஸ்பெஷல்: எப்போது அறிமுகம்?

ஒன்பிளஸ் நிறுவனம் எப்போதுமே தரமான ஸ்மார்ட்போன்களை தான் இந்திய சந்தையில் தான் அறிமுகம் செய்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

 ஒன்பிளஸ் 10டி 5ஜி

ஒன்பிளஸ் 10டி 5ஜி

இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 10 அல்ட்ரா என்கிற ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிடும் என்று கூறப்பட்டு வந்த நிலையில்,
அதற்கு பதிலாக ஒன்பிளஸ் 10டி 5ஜி (OnePlus 10T) மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி இந்த புதிய ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இப்போது ஆன்லைனில் கசிந்த ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப்
பார்ப்போம்.

சூப்பரான ரேம் வசதி

சூப்பரான ரேம் வசதி

ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போனில் 16ஜிபி ரேம் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் நினைத்த அனைத்து ஆப்ஸ்களையும் எளிமையாக பயன்படுத்த முடியும். அதேபோல் 256ஜிபி/512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக்கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போன்.

 டிஸ்பிளே எப்படி?

டிஸ்பிளே எப்படி?

டிஸ்பிளேவில் எப்போதும் ஒன்பிளஸ் தான் கில்லி. அதாவது இந்த ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போனிலும் ஒரு அருமையான டிஸ்பிளே வசதி உள்ளது. அதாவது இந்த புதிய போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்.

கேமராவில் மாற்றமில்லை

கேமராவில் மாற்றமில்லை

ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் அதே 50எம்பி கேமரா ஆதரவு கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இந்த புதிய போன் 50எம்பி மெயின் கேமரா + 16எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு பதிலாக 108எம்பி ரியர் கேமரா வழங்கப்பட்டால் இன்னமும் அருமையாக இருக்கும். அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும்என்றே 32எம்பி கேமராவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தரமான சிப்செட்

தரமான சிப்செட்

ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனில் தரமான சிப்செட் வசதி உள்ளது. அதாவதுஇந்த போன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் ஆதரவைக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற வசதிகளுக்கு மிகவும் அருமையாக பயன்படும்.

அதேபோல் அண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

பேட்டரி வசதி

பேட்டரி வசதி

ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4800 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 150W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
OnePlus 10T 5G smartphone to launch soon with 16GB RAM: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X