அடுத்த மலிவு விலை ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்: 150வாட்ஸ் சார்ஜிங் உடன் வருகிறதா ஒன்பிளஸ் 10ஆர்- லீக்கான அம்சங்கள்!
ஒன்பிளஸ் 10ஆர் ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. இது மற்றொரு மலிவு விலை சாதனமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

ஒன்பிளஸ் 10 ஆர் சாதனத்தின் விவரக்குறிப்புகள்
ஒன்பிளஸ் என்ற பிராண்ட் ஆண்டுக்கு இரண்டு சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. ப்ரீமியம் என்ற வார்த்தைக்கு இணங்க தங்களது சாதனங்களை அறிமுகம் செய்வதில் ஒன்பிளஸ் புகழ் பெற்றது. இந்த நிறுவனங்களின் சாதனம் தொடர்ந்து பல்வேறு வித்தியாசமான உக்தியை கையாண்டு புதுப்புது அம்சங்களோடு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த பிராண்ட் ஒன்பிளஸ் 10 ப்ரோவை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த நிலையில் அதற்கு முன்னதாக வரவிருக்கும் ஒன்பிளஸ் 10 ஆர் சாதனத்தின் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளிவந்திருக்கிறது.இந்த சாதனத்தின் பெயர் குறிப்பிடுவது போல, ஒன்பிளஸ் 10 ஆர் என்பது நிறுவனத்தின் மலிவு விலையில் உயர் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். ஒன்பிளஸ் 10ஆர் சாதனத்தின் முழுமையான விவரக்குறிப்புகள் ஆனது 91 மொபைல்ஸ் அறிக்கை மற்றும் யோகேஷ் பிரார் உடன் இணைந்து வெளியிடப்பட்டிருக்கிறது.

ஒன்பிளஸ் 10ஆர் விவரக்குறிப்புகள்
வெளியான அறிக்கையின்படி, ஒன்பிளஸ் 10ஆர் ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.7 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஸ்மார்ட்போனின் பாதுகாப்பு அம்சத்துக்கு என இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் ஒன்பிளஸ் 10 ஆர் சாதனத்தில் எல்டிபிஓ 2.0 டிஸ்ப்ளேவை ஒன்பிளஸ் சாதனத்தை பயன்படுத்தும் என்பது சற்று கடினம் தான். காரணம் ஒன்பிளஸ் 10 ப்ரோ போன்ற ப்ரீமியம் சாதனங்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மீடியாடெக் டைமன்சிட்டி 8100 எஸ்ஓசி
ஒன்பிளஸ் 10ஆர் சாதனமானது மீடியாடெக் டைமன்சிட்டி 8100 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இது மேல் இடைநிலை ஸ்மார்ட்போன்களுக்கு 2022-ன் விருப்பமான சிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என தகவல்கள் தெரிவிக்கிறது. கூடுதல் சேமிப்பக விரிவாக்கத்திற்காக சாதனத்தில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

4கே வீடியோ பதிவு ஆதரவு
இந்த ஸ்மார்ட்போனானது 4கே வீடியோ பதிவு, ஓஐஎஸ் மற்றும் பல அம்சங்களை வழங்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி முதன்மை கேமரா இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் ஒன்பிளஸ் 10ஆர் ஸ்மார்ட்போனில் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த கேமராவின் மூலமாகவும் 4கே தர வீடியோ பதிவு செய்ய வாய்ப்புள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

4500 எம்ஏஎச் பேட்டரி
ஒன்பிளஸ் 10 ஆர் ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் இந்த ஒன்பிளஸ் 10 ஆர் ஸ்மார்ட்போனில் 150 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் சார்ஜர் சில்லறை தொகுப்பிலேயே சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஒன்பிளஸ் 10ஆர் ஸ்மார்ட்போனின் விலை ஆனது சுமார் ரூ.40,000 என்ற விலை வரம்பில் இருக்கும் என கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது
அதேபோல் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த இந்திய ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடலான OnePlus 10 Pro 5G சாதனத்தின் இந்திய அறிமுக தேதி மற்றும் நேரம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி, இந்தியாவில் வரும் மார்ச் 31 ஆம் தேதி புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி மாலை 7:30 மணிக்கு வெளியீட்டு விழா தொடங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
Source: 91mobiles.com


Click it and Unblock the Notifications