Home
Mobile

இப்படியொரு ஆஃபர் கொடுத்த OnePlus போன் வாங்க தோணுமே! அதும் இந்த போனுக்கு!

ஒன்பிளஸ் (OnePlus) மாடல்களில் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற ஆல்-ரவுண்டர் போன் என்றால், அது ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி மட்டுமே. இந்தியாவில் ரூ.38,999-க்கு அறிமுகமான ஒன்பிளஸ் 10ஆர் போன், இப்போது அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட்டில் (Flipkart) ரூ.30 ஆயிரத்துக்கும் கீழ் கிடைக்கிறது.

இந்த ஆஃபரை எப்படி பெறுவது என்ற விவரங்கள் இதோ. ஆப்பிள், சாம்சங் போன்களுக்கு அடுத்தப்படியாக ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அந்த அளவுக்கு ஒன்பிளஸ் போன்களின் கேமரா மற்றும் அம்சங்களில் பின்னியெடுக்கும். இப்படிப்பட்ட போன்களில் ஆல்-ரவுண்டர் என்று பெயர் பெற்ற ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி விற்பனையில் சக்கைபோடு போட்டது.

இப்படியொரு ஆஃபர் கொடுத்த OnePlus போன் வாங்க தோணுமே!

இந்த போன் கிட்டத்தட்ட ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனைக்கு வந்ததால், ஒன்பிளஸ் பிரியர்கள் காத்திருந்து வாங்க வேண்டியிருந்தது. ஆனால், இப்போது, ரூ.30 ஆயிரத்துக்கும் கீழ் ஆஃபர் விலையில் கிடைக்கிறது. இந்த போனின் முழு அம்சங்கள் மற்றும் அமேசான், பிளிப்கார்ட் ஆஃபர் குறித்த விவரங்கள் பின்வருமாறு.

அமேசான் ஆஃபர் விவரங்கள். இந்த ஒன்பிளஸ் 10ஆர் போனின் விலை அமேசானில் ரூ.34,999 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இப்போது, ரூ.4,000 பிளாட் டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதலாக ரூ.2,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.28,999 மட்டுமே கொடுத்து ஒன்பிளஸ் 10ஆர் போனை வாங்கிக் கொள்ள முடியும்.

பிளிப்கார்ட் ஆஃபர் விவரங்கள்: பிளிப்கார்ட்டில் ரூ.30,990 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி போனுக்கு ரூ.919 பிளாட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதோடு எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு மூலம் ரூ.1,250 தள்ளுபடி பெற முடியும். இதன் மூலம் ரூ.28,821 மட்டுமே கொடுத்து ஒன்பிளஸ் 10ஆர் போனை வாங்கலாம்.

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி அம்சங்கள் (OnePlus 10R 5G Specification): இந்த ஒன்பிளஸ் போன் 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே (2400 X 1080 பிக்சல்கள்) கொண்டுள்ளது. அதோடு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 புரொடெக்ஷன் (Corning Gorilla Glass 5) வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 12 உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 மேக்ஸ் (MediaTek Dimensity 8100 Max) சிப்செட் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஆக்ஸிஜன்ஓஎஸ் 13 (OxygenOS 13) வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட் உள்ளது.

டிரிபிள் மெயின் கேமரா செட்டப் கொண்டுள்ளது. அதன்படி 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கொண்டுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா உள்ளது. மெயின் மற்றும் செல்பீ இரண்டிலும் எச்டிஆர் (HDR) சப்போர்ட் உள்ளது. இன் டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் 5000 mAh பேட்டரி வருகிறது.

சியரா பிளாக் (Sierra Black), ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green) மற்றும் பிரைம் ப்ளூ (Prime Blue) ஆகிய மூன்று கலர்களில் கிடைக்கிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி தெரிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் எப்போதும் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
OnePlus 10R Specification Price Flat Discount on Amazon and Flipkart Here is Full Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X