Home
Mobile

இந்த சலுகையுமா?- இந்த OnePlus போன் வாங்குனா அமேசான் பிரைம் சந்தா இலவசம்!

OnePlus 10R ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் ஆன 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இன் விலை ரூ.34,999 எனவும், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.38,999 எனவும் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த நிலையில் OnePlus 10R பிரைம் இன் புதிய வண்ண மாறுபாடு அமேசானில் பிரத்யேகமாக விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரத்யேகமாக அமேசானில் விற்பனை

OnePlus 10R இன் புதிய ப்ளூ நிற பதிப்பை அறிமுகப்படுத்த உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

ப்ளூ வேரியண்ட் இன் விலையை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

OnePlus 10R பிரைமின் ப்ளூ பதிப்பு என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் பிரத்யேகமாக அமேசானில் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆரம்ப கால சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளூ வண்ண மாடல் அறிமுகம்

ப்ளூ வண்ண மாடல் அறிமுகம்

அதாவது OnePlus 10R பிரைமின் ப்ளூ பதிப்பை வாங்கும் பயனர்களுக்கு 3 மாதத்திற்கான Amazon Prime சந்தா இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை இருப்பினும் செப்டம்பர் 23 ஆம் தேதி நடக்க இருக்கும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் சலுகை உடன் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கத் தொடங்கும் என கூறப்படுகிறது.

வண்ண விருப்பத்தை தவிர பிற அனைத்து அம்சங்களும் முந்தைய வண்ண மாறுபாட்டுக்கு ஒத்துப்போகும் வகையில் இருக்கிறது.

ஒன்பிளஸ் 10ஆர் அம்சங்கள்

ஒன்பிளஸ் 10ஆர் அம்சங்கள்

ஒன்பிளஸ் 10ஆர் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.42,999-ஆக உள்ளது. இதன் விலை ஒவ்வொரு தளத்திலும் சலுகையின் அடிப்படையில் மாறுபடுகிறது.

ஒன்பிளஸ் 10ஆர் ஸ்மார்ட்போன் ஆனது பெரிய டிஸ்ப்ளே உடன் கிடைக்கிறது. அதாவது இந்த போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே வசதியைக் கொண்டுள்ளது.

அதேபோல் இந்த டிஸ்ப்ளே 2400 X 1080 பிக்சல்கள், 20:9 ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டிருக்கிறது.

மீடியாடெக் Dimensity 8100 Max சிப்செட் வசதி

டிஸ்பிளேவை விட இதன் சிப்செட் வசதி தான் அருமையாக உள்ளது. அதாவது மீடியாடெக் Dimensity 8100 Max சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

எனவே இந்த போன் இயக்குவதற்கு அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற அனைத்து தேவைகளுக்கு இந்த சாதனம் மிக அருமையாக பயன்படும்.

ஆண்ட்ராய்டு 12 ஆதரவு

அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியானது. மொத்தமாக இந்த போனின் சிப்செட் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். அடுத்தடுத்து புதிப்பிப்பை இந்த ஸ்மார்ட்போன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

50எம்பி பிரதான கேமரா

50எம்பி பிரதான கேமரா

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி Sony IMX766 பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

குறிப்பாக குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களில் கூட அருமையான படங்களை எடுக்க உதவுகிறது இதன் கேமராக்கள்.

80W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங்

80W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங்

அதேபோல் செல்பி மற்றும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என இஐஎஸ் ஆதரவு கொண்ட 16எம்பி கேமரா இதன் முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். இதன்மூலம் நீங்கள் அதிக நேரம் கேம் விளையாடலாம்.

அதேபோல் 80W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன்.

குறிப்பாக சிறிது நேரத்தில் இந்த போனை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

புதிய ப்ளூ வண்ண வேரியண்ட்

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் சியரா பிளாக் நிறங்களில் கிடைத்த நிலையில் தற்போது ப்ளூ வண்ண விருப்பத்தில் கிடைக்க இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 10R Prime Blue colour announced With Free Amazon Prime subscription Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X