இப்படிதானு இல்ல., இப்படியும் வரலாம்- ஒன்பிளஸ் 10 குறித்து வெளியான தகவல் இதுதான்: வேறலெவல் அம்சம்!
வெண்ணிலா ஒன்பிளஸ் 10 ஸ்மார்ட்போனானது அதன் முறையான வெளியீட்டிற்கு முன்னதாக டீனா தளத்தில் சான்றளிப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் கிடைக்கும் என்பது தெளிவுப்படுத்தப்படுகிறது. அதேபோல் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஜனவரி 2022-ல் வெளியிடப்படும் எனவும் இந்த ஸ்மார்ட்போனின் முன்கூட்டிய ஆர்டர்கள் ஜனவரி 4 ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்
ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 செயலி மூலம் இயக்கப்படும் எனவும் ஒன்பிளஸ் 10 தற்போது சீன டீனா ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளதால் இது விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது. வதந்தி தகவலின்படி ஒன்பிளஸ் 10 ஸ்மார்ட்போனானது மாடல் எண் ஒன்பிளஸ் என்இ2210 உடன் சமீபத்தில் டீனா தளத்தில் சான்றளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாதனத்தின் வெளியீடு உடனடியானது என்பதை குறிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாடல் எண் ஒத்துப்போவதாக கருதப்பட்டாலும் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமானது இல்லை.

டீனா தளம்
இருப்பினும் டீனா தளம் நாம் முன்னதாகவே அறிந்ததை உறுதிப்படுத்துகிறது. ஒன்பிளஸ் 10 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் இந்த பட்டியலில் சாதனத்தின் நேரடி படங்களோ அல்லது சாதனத்தின் தகவல்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள்
ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் க்யூஎச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வரும் என கூறப்படுகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பெரும்பாலும் சாதனத்தின் காட்சியை பாதுகாக்கும் என நம்பப்படுகிறது. இது செல்பி கேமராவிற்கான பஞ்ச் ஹோல் கட்அவுட்டை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது 32 எம்பி முன்புற கேமரா உடன் வரும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பி பிரதான கேமரா, 48 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 8 எம்பி மூன்றாம் நிலை கேமரா என மூன்று பின்புற கேமரா உள்ளமைவுடன் வரும் என கூறப்படுகிறது.

ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 செயலி
ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 செயலி மூலம் இயக்கப்படும். இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மென்பொருள் முன்னணியில் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 12 மேலோட்டத்துடன் முன்பே நிறுவப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது 80 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் எனவும் இது 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு வரும் எனவும் கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ டிஸ்ப்ளே விவரங்கள்
ஒன்பிளஸ் 10 ப்ரோ டிஸ்ப்ளே விவரங்கள் அறிமுகம் ஒரு மாதத்திற்கு குறைவாக இருப்பதால் புதுப்பிக்கப்பட்ட விவரங்களை நிறுவனம் டீஸ் செய்துள்ளது. ஒன்பிளஸ் சிஇஓ தற்போது ஒன்பிளஸ் 10 ப்ரோ குறித்த மற்றொரு தகவலை வெளியிட்டுள்ளார். ஒன்பிளஸ் நிர்வாகி வெய்போ இடுகையில் ஃபோன் எல்டிபிஓ 2.0 டிஸ்ப்ளே உடன் வரும் என உறுதிப்படுத்தியுள்ளார். இது மென்மையான பார்வை அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் அனைத்தும் வதந்தியில் அடிப்படையிலானவை ஆகும். இந்த ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
Image Source: 91mobiles.com


Click it and Unblock the Notifications