ஒன்பிளஸ் 10 சீரீஸ்: எச்டிஆர்10+ மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்ஸ் உடன் ஒப்பிட முடியாத டிஸ்பிளேக்கள்!

|

ஒன்பிளஸ் நிறுவனம் "பிளாக்ஷிப் கில்லர்களை" உருவாக்கியதன் மூலம் ஸ்மார்ட்போன் துறையில் தனது பயணத்தை தொடங்கியது. வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை என்பதில் கவனம் செலுத்துவதை நோக்கமாக கொண்ட இந்த பிராண்ட், அதன் ஸ்மார்ட்போன்களில் அதிகபட்ச அம்சங்கள், பிரீமியம் உருவாக்கத் தரம் மற்றும் ஒப்பிடமுடியாத செயல்திறன் ஆகியவற்றை வழங்குவதற்கும் பெயர்போனது. அம்சங்கள் மற்றும் செயல்திறனுடன் சேர்த்து இந்நிறுவனம் அதிக கவனம் செலுத்திய இன்னொரு பகுதி ஒன்றும் உள்ளது; அது தான் - டிஸ்பிளே!

ஒன்பிளஸ் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் ஒப்பிட முடியாத டிஸ்பிளேக்கள்!

எப்போதுமே டிஸ்பிளே டெக்னாலஜிக்கு முன்னுரிமை அளிக்கும் ஒன்பிளஸ்!

ஒன்பிளஸ் நிறுவனம் இப்போது வெவ்வேறு விலை பிரிவுகளின் கீழ் பரந்த எண்ணிக்கையிலான ஸ்மார்ட்போன்களை வழங்குகிறது, ஆனாலும் கூட டிஸ்பிளே துறையில் செலவை குறைப்பதற்கான எந்த வழியையும் இதுவரை நாடவில்லை. இந்நிறுவனம் சிறந்த மற்றும் தரமான டிஸ்பிளே பேனல்களை வழங்குகிறது மற்றும் அதிவேகமான வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்க லேட்டஸ்ட் டிஸ்பிளே தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்துகிறது. அதற்கு - ஒன்பிளஸ் 19ஆர், ஒன்பிளஸ் 10டி மற்றும் ஒன்பிளஸ் 10 ப்ரோ போன்ற மாடல்களை உள்ளடக்கிய ஒன்பிளஸ் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்!

ஒன்பிளஸ் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் ஒப்பிட முடியாத டிஸ்பிளேக்கள்!

ஒன்பிளஸ் 10ஆர் ஒரு பிரீமியம் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆகும், அதேசமயம் ஒன்பிளஸ் 10டி மற்றும் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஆகியவைகள் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இவைகள் அனைத்துமே வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்தவை என்றாலும் கூட, எல்லாமே ஹை ஸ்க்ரீன் ரெஃப்ரெஷ் ரேட்ஸ் மற்றும் எச்டிஆர்10+ ஆதரவை கொண்ட10-பிட் லிக்விட் அமோஎல்இடி பேனல்களை பேக் செய்கின்றன.

ஒன்பிளஸ் 10 சீரீஸில் அமோஎல்இடி பேனலின் முக்கியத்துவம்!

பெரும்பாலான நிறுவனங்கள் ஆனது தத்தம் ஸ்மார்ட்போன்களில் கூடுதல் அம்சங்கள், சிறந்த கேமராக்கள் அல்லது உயர் செயல்திறன் கொண்ட ப்ராசஸரை சேர்க்கும் நோக்கத்தின் கீழ் டிஸ்பிளேவில் சில சமரசங்கள் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளன. ஆனால், ஒன்பிளஸ் நிறுவனம் சரியான சமநிலையை உருவாக்கி, ஸ்மார்ட்போனின் மிக முக்கியமான அம்சமாக இருப்பதால் டிஸ்பிளேவிற்கு நல்ல அளவிலான முன்னுரிமை அளிக்கிறது. எல்சிடி பேனல்களுடன் ஒப்பிடும் போது அமோஎல்இடி பேனல்கள் ஆனது துடிப்பான நிறங்கள், ஆழமான கறுப்பு நிறங்கள், சிறந்த பிரைட்னஸ் லெவல் மற்றும் அதிக ஆற்றல் திறன் (ஹையர் பவர் ஏஃபிஸியென்சி) ஆகியவற்றை வழங்குகின்றன.

ஒன்பிளஸ் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் ஒப்பிட முடியாத டிஸ்பிளேக்கள்!

ஒன்பிளஸ் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது 1.07 பில்லியன் வண்ணங்களுடனான 10-பிட் டிஸ்ப்ளேக்களுடன் அனுப்பப்படுகின்றன, இது வழக்கமான 8-பிட் அமோஎல்இடி பேனல்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் 16.7 மில்லியன் வண்ணங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாக உள்ளது. துடிப்பான வண்ணங்கள் மற்றும் பரந்த அளவிலான கலர் கேமட் ஆகியவைகள் ஒன்றிணைந்து முன்னெப்போதும் பெற்றிராத மல்டிமீடியா அனுபவத்தை உங்களுக்கு வழங்கும். மேலும் அமோஎல்இடி பேனல்கள் மற்றும் 10-பிட் கலர் கேமட் ஆகியவற்றின் "கூட்டணி" காரணமாக உங்கள் படங்களும் சரி, வீடியோக்களும் மிகவும் உயிரோட்டமாக இருக்கும்.

மேலும், 8-பிட் அமோஎல்இடி பேனல்கள் அல்லது எல்சிடி-களுடன் ஒப்பிடும் போது, இதன் டிஸ்பிளேக்கள் உங்கள் கேமிங் மற்றும் யுஐ அனுபவத்தையும் கூட மேம்படுத்தும்!

ஒன்பிளஸ் 10 சீரீஸ் உள்ள எச்டிஆர்10+ ஆதரவின் வழியாக கிடைக்கும் நன்மைகள்!

ஒன்பிளஸ் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது எச்டிஆர்10+ எனப்படும் ஹை டைனமிக் ரேஞ்ச் ஆதரவுடன் வருகிறது. இது அதிக ப்ரைட்னஸ், மேம்படுத்தப்பட்ட கான்ட்ராஸ்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட கலர் அக்யூரசி ஆகியவற்றை வழங்குகிறது. எச்டிஆர்10+ என்கிற தரநிலையானது பழைய எச்டிஆர்10 தரநிலை உடன் ஒப்பிடும் போது ஒரு பெரிய வித்தியாசத்தை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். மேலும் பழைய எச்டிஆர்10 உடன் மிகைப்படுத்தப்பட்ட (ஓவர்சேச்சுரேட்ட) டிஸ்பிளேவின் ஹை கான்ட்ராஸ்ட் பகுதிகள் ஆனது எச்டிஆர்10+ ஆதரவின் கீழ் மிகவும் மிருதுவானதாக இருக்கும்!

ஒன்பிளஸ் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் ஒப்பிட முடியாத டிஸ்பிளேக்கள்!

மேலும் இந்த எச்டிஆர்10+ ஆனது ஒரு டிஸ்பிளேவிற்கு பீக் ப்ரைட்னஸை அடையும் திறனையும் வழங்கும். அதுமட்டுமின்றி சாதாரண எஸ்டிஆர் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேக்களால் வழங்க முடியாத ரென்டிஷன் ஆஃப் கலர்ஸையும் (ரென்டிஷன் ஆஃப் கலர்ஸ்) அனுமதிக்கிறது. இதனால் நீங்கள் திரைப்படங்களை ஸ்ட்ரீமிங் செய்யும் போது, உயர்தர எச்டிஆர் வீடியோ கன்டென்ட்களை காணும் போது, கேமிங் செய்யும் போது அது மிகவும் யதார்த்தமானதாக தோன்றும்!

ஒன்பிளஸ் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் ஒப்பிட முடியாத டிஸ்பிளேக்கள்!

ஒன்பிளஸ் 10 சீரீஸில் உள்ள ஹை ரெஃப்ரெஷ் ரேட்!

ஒன்பிளஸ் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது மென்மையான யுஐ மற்றும் கேமிங் அனுபவத்தை உறுதி செய்வதற்காக 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகின்றன. நீங்கள் இண்டர்நெட்டில் பிரவுசிங் செய்தாலும் சரி, பேஜ்களை அல்லது டாக்குமெண்ட்களை ஸ்க்ரோலிங் செய்தாலும் சரி, சோஷியல் மீடியா ஆப்களில் நேரம் செலவிட்டாலும் சரி - ஒன்பிளஸ் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் டிஸ்பிளேவில் உள்ள ஃப்ளுயூயிடிட்டி ஆனது மிகவும் உதவிகரமானதாக இருக்கும்!

ஒரு ஸ்மார்ட்போனிற்கு நல்ல ரெஃப்ரெஷ் ரேட்ஸ் மட்டுமே போதாது என்பதை நன்கு அறிந்த ஒன்பிளஸ் நிறுவனம், கேமிங்கின் போது உங்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை வழங்கும் நோக்கத்தின் கீழ் நல்ல டச் சாம்ப்ளிங் ரேட்டையும் வழங்குகிறது.

கேமர்கள் - கடந்த பல ஆண்டுகளாக நல்ல முறையில் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளனர், மேலும் அவர்களில் பெரும்பாலோர் பப்ஜி மொபைல் / பிஜிஎம்ஐ அல்லது கால் ஆஃப் டூட்டி போன்ற ஆக்ஷன் கேம் போன்ற மூன்று விரல் அல்லது நான்கு விரல் செட்டப்களுக்கு மாறியுள்ளனர். கேம்களை விளையாட இரண்டு விரல்கள் அல்லது கட்டைவிரலை பயன்படுத்தும் செட்டப்பிற்கு மாறாக, மூன்று விரல் அல்லது நான்கு விரல் செட்டப் ஆனது நிறைய ஸ்க்ரீன் இன்புட்களை உள்ளடக்கியது. எனவே தான் ஒன்பிளஸ் நிறுவனத்தின் பெஸ்ட் டிஸ்ப்ளே பேனல்கள் மற்றும் ட்யூனிங் ஆகியவைகள், சாதாரண கேம் ஆக இருந்தாலும் சரி, அதுவொரு தொழில்முறை கேமிங்காக இருந்தாலும் சரி, அது மிகவும் விரைவாக இருப்பதை உறுதி செய்கிறது.

ஒன்பிளஸ் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் ஒப்பிட முடியாத டிஸ்பிளேக்கள்!

சமரசம் செய்யப்படாத டிஸ்பிளே தொழில்நுட்பம்!

கன்டென்ட் நுகர்வு, ப்ரொடெக்டிவிட்டி அல்லது கேமிங் என எதுவாக இருந்தாலும், ஒரு ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே மிகவும் நேர்த்தியாக இருந்தால், அது ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அதிர்ஷ்டவசமாக, ஒன்பிளஸ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட பிராண்டாக இருப்பதால், அதன் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறது மற்றும் அதில் சமரசமும் இருக்காது!

Best Mobiles in India

English summary
OnePlus 10 Series Best In Class Displays with HDR10 and 120Hz Refresh Rates

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X