Home
Mobile

விரைவில் அறிமுகமாகும் அசத்தலான ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்.!

ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது வரும் 2022 ஜனவரி 11-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் அறிமுகமாகும் அசத்தலான ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்.!

அதேபோல் முதலில் இந்த புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு தான் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும். குறிப்பாக ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் தான் இந்த ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் டீசர் வீடியோவை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்த ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். 6.7-இன்ச் QHD+ டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 8 Gen 1 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி + 50எம்பி + 8எம்பி என மொத்தம் மூன்று கேமராக்கள் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

விரைவில் அறிமுகமாகும் அசத்தலான ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்.!

ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

விரைவில் அறிமுகமாகும் அசத்தலான ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்.!

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 1200-AI SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் OxygenOS 11.3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 2எம்பி மோனோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமராஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக 4 கே வீடியோக்கள், நைட்ஸ்கேப் அல்ட்ரா பயன்முறை, AI மேம்பாடுகள், போர்ட்ரெயிட் மோட், நைட் போர்ட்ரெயிட் மோட், டூயல் வியூ வீடியோ மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

விரைவில் அறிமுகமாகும் அசத்தலான ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்.!

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனம். எனவே வெறும் 30 நிமிடங்களில் 0 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

Image Source

Best Mobiles in India

English summary
OnePlus 10 Pro with 48 Mega Pixel Camera Launching in China on January 11: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X