ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி கேமராவுடன் வெளிவரும் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்.!
ஒன்பிளஸ் நிறுவனம் வரும் ஜனவரி 4-ம் தேதி சீனாவில் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய
திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி உள்ளது. இந்தசிப்செட் வசதி பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இது ஸ்மார்ட்போனை வேகமாக செயல்படவைக்கும் என்றேகூறலாம்.

அதேபோல் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். 6.7-இன்ச் QHD+ டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன்
இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 8 Gen 1 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி + 50எம்பி + 8எம்பி என மொத்தம் மூன்று கேமராக்கள் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ் எனப் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்.
Image Source: @onleaksx@zoutonus


Click it and Unblock the Notifications