Home
Mobile

ஜனவரி மாதம் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்மாடல்.!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜனவரி மாதம் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்மாடல்.!

ஒன்பிளஸ் 10 ப்ரோ

ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 Gen 1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த சாதனம் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலில் 6.7-இன்ச் QHD+ LTPO AMOLED டிஸ்பிளே வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன்
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஜனவரி மாதம் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்மாடல்.!

ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8எம்பி டெலிபோட்டோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன்
இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்நிறுவனம் ஒன்பிளஸ் நோர்ட் 2 சிஇ ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம்
செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 சிஇ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் நோர்ட் 2 சிஇ

ஜனவரி மாதம் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்மாடல்.!

ஒன்பிளஸ் நோர்ட் 2 சிஇ ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

புதிய ஒன்பிளஸ் நோர்ட் 2 சிஇ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 900 SoC சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கும் இந்த ஸ்மார்ட்போன் மிக அருமையாக பயன்படும்.

ஒன்பிளஸ் நோர்ட் 2 சிஇ ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த
ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்மாடல்.!

ஒன்பிளஸ் நோர்ட் 2 சிஇ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதேபோல் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
OnePlus 10 Pro smartphone model that will be launched next month: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X