இதோ அடுத்த மாதம் அறிமுகம்: ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப் உடன் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்!
ஒன்பிளஸ் தனது அடுத்த ஜென் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் வெளியிட உள்ளது. ஒன்பிளஸ் 10 ப்ரோ அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என பிராண்ட் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 செயலியுடன் 10 ப்ரோ அனுப்பப்படுவதாக ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் முக்கிய விவரக்குறிப்புகள் பல முறை கசிந்திருக்கிறது. இதுவரை வெளியான ஒன்பிளஸ் 10 ப்ரோ வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 10 ப்ரோவின் அறிமுகம் சிஇஓ பீட் லாவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் தனது வெய்போ தளத்தில் வெளியீட்டு காலவரிசையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் சரியான வெளியீட்டு தேதியை வெளியிடவில்லை என்றாலும் வதந்திகள்படி ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக டிப்ஸ்டர் மேக்ஸ் ஜம்போர், ஜனவரி 5 ஆம் தேதி லாஸ் வேகாஸில் ஒன்பிளஸ் ஒரு வெளியீட்டு நிகழ்வை நடத்துவதாக கூறினார். எனவே இந்த நிகழ்வில் பிராண்ட் ஒன்பிளஸ் 10 ப்ரோ சாதனத்தை அறிவிக்க வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்கு நாம் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்பிளஸ் 10 ப்ரோ எதிர்பார்க்கப்படும் வடிவமைப்பு குறித்து பார்க்கலாம். வடிவமைப்பை பொறுத்தவரை நெக்ஸ்ட் ஜென் ஒன்பிளஸ் 10 ப்ரோ அதன் முன்னோடியான ஒன்பிளஸ் 9 ப்ரோ அதன் முன்னோடியான ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனம் போன்று இருக்கும் எனவும் இது வேறுபட்ட கேமரா தொகுதியை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் டிரிபிள் சென்சார்களை வைப்பதற்கு இது ஒரு சதுர வடிவ கேமரா வடிவமைப்பைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஹேசல்ப்ளாட் பிராண்டிங் சென்சார்களுக்கு அடுத்ததாக செங்குத்தாக வைக்கப்படும் எனவும் பிராண்டின் லோகோ பின்புற பேனலின் மையத்தில் இது இருக்கும் என கூறப்படுகிறது.

வலது விளிம்பில் பவர் பட்டன், வால்யூம் ராக்கர்ஸ் இடது புறத்தில் இருக்கும் எனவும் முன்பக்கத்தில் சாதனம் திரையின் மேல் இடது மூலையில் வைக்கப்படும் பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியோடு இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 10 ப்ரோ அம்சங்களை பார்க்கலாம். இந்த ஒன்பிளஸ் 10 ப்ரோ சாதனமானது 6.7 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே வசதியோடு வரும் எனவும் 2கே தெளிவுத்திறன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 சிப்செட் வசதியோடு வரும் எனவும் இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் எனவும் கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 10 ப்ரோ சாதனமானது ஆண்ட்ராய்டு 12 ஒஸ், கலர் ஓஎஸ் 12 தனிப்பயன் ஸ்கின் உடன் வருகிறது.
அதேபோல் இமேஜிங் ஆதரவுக்கு என டிரிபிள் கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது. இது 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் ஆதரவு மற்றும் 8 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகிய டிரிபிள் ரியர் கேமராக்கள் உடன் வருகிறது. செல்பி வசதிகளுக்கு என 32 மெகாபிக்சல் முன்புற கேமராவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் 80 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் அம்சங்கள், 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு இந்த சாதனம் வரும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் 10 ப்ரோ இந்திய வெளியீட்டு விவரங்கள் குறித்து பார்க்கலாம். தற்போதைய நிலவரப்படி ஒன்பிளஸ் 10 ப்ரோ இந்திய வெளியீடு குறித்த விவரங்கள் எதுவும் இல்லை. மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் இந்த சாதனம் சந்தைக்கு வரலாம் என கூறப்படுகிறது. இந்த பிராண்ட் ஒன்பிளஸ் 10 மற்றும் ப்ரோ மாடல்கள் இரண்டையும் ஒரே நேரத்தில் கொண்டுவருமா என்பது குறித்த விவரங்கள் குறித்து பார்க்கையில் ஒன்பிளஸ் 10 வடிவமைப்பு மட்டுமே ஆன்லைனில் கசிந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தற்போது வரை மர்மமாகவே இருக்கிறது.


Click it and Unblock the Notifications