கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒன் இந்திய மொபைல் அப்ளிக்கேஷன்!

Posted By: Staff
கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒன் இந்திய மொபைல் அப்ளிக்கேஷன்!

நாட்டு நடப்பு மற்றும் பல தகவல்களை உடனுக்குடன் வழங்கும் ஒன் இந்தியா வலைத்தளம் புதிய அப்ளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஒன் இந்தியா அப்ளிக்கேஷன் மூலம் மிக எளிதாக, ஒன் இந்தியா வலைத்தளத்தில் உள்ள செய்திகளை படிக்கலாம்.

கூகுள் ப்ளே மூலம் டவுன்லோட் செய்து, கையில் வைத்திருக்கும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலேயே சுலபமாக இதன் தகவ்லகளை தெரிந்து கொள்ள முடியும். இதை இன்னும் சுருக்கமாக சொன்னால் உள்ளங்கையில் ஒன் இந்தியா என்று தான் சொல்ல வேண்டும்.

இதை சுலபமாக எல்லோரும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. செய்திகள், கிரிக்கெட், பொழுதுபோக்கு சம்மந்தமான விஷயங்கள் என்று பல தகவல்களை இந்த ஒன் இந்தியா அப்ளிகேஷன் மூலம், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலேயே தெரிந்து கொள்ளலாம்.

படிப்போருக்கு பிடித்தமான விஷயங்களை முதன்மைப்படுத்தி (கஸ்டமைஸ்) வைத்து கொள்ளவும் முடியும். விருமப்பமான செய்திகளை தேடி படிக்கவும் முடியும், இதை நண்பர்களுடன் ஃபேஸ்புக்கல் பகிர்ந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கவும் முடியும்.

இன்டர்நெட் இல்லாத சமயத்திலும் இந்த செய்திகளை படிக்கலாம். ஆம்! இதை கேட்கும் போது நிச்சயம் அனைவருக்கும் ஆச்சர்யமானதாக இருக்கும்.

இதில் சேவ் செய்து கொள்ளும் வசதி உள்ளதால், வேண்டிய

விஷயத்தினை சேவ் செய்து வைத்து கொண்டு, எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். அதாவது ஆஃப்லைனிலும்

படிக்க முடியும்.

இனி இந்த ஒன் இந்தியா அப்ளிக்கேஷன் கூகுள் ப்ளே மூலம் எளிதாக டவுன்லோட் செய்யலாம் என்பதனால் செய்திகள் வாசகர் வசம் என்றும் சொல்லலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot