Home
Mobile

Redmi-யின் லேட்டஸ்ட் 5G Phone மீது செம்ம ஆஃபர்.. கையில இருக்குறது கூட தெரியாத அளவுக்கு ஸ்லிம் டிசைன் வேற!

ரெட்மி (Redmi) நிறுவனத்தின் மிகவும் பிரபலமான நோட் சீரீஸின் (Note Series) கீழ் அறிமுகமான மிகவும் ஸ்லிம் (Slim) ஆன ஸ்மார்ட்போன் மீது தள்ளுபடி (Discount) அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் இங்கே பேசுவது ரெட்மி நோட் 12 5ஜி (Redmi Note 12 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான்!

நினைவூட்டும் வண்ணம் இது கடந்த ஜனவரி மாதம் ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி (Redmi Note 12 Pro 5G) மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 12 Pro Plus 5G) ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அமேசான் (Amazon) மற்றும் எம்ஐ.காம் (Mi.com) வழியாக இது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

Redmi-யின் லேட்டஸ்ட் 5G Phone மீது செம்ம ஆஃபர்!

ரூ.17,999 க்கு அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் தப்போது ரூ.16,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐசிஐசிஐ (ICICI) வங்கி மற்றும் எஸ்பிஐ (SBI) கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கினால் கூடுதலாக ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கும்.

மேற்கண்ட 2 சலுகைகளையுமே பயன்படுத்தும் பட்சத்தில் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனின் ஸ்மார்ட்போனின் விலையை ரூ.14,999 ஆக குறைக்க முடியும். ஒருவேளை நீங்கள் உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்ய விரும்பினால், அதிகபட்சமாக ரூ.19,800 வரையிலான தள்ளுபடி கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் எச்டிஎப்சி (HDFC) கிரெடிட் கார்டுகள், இஎம்ஐ (EMI) பரிவர்த்தனைகள் மற்றும் ஐசிஐசிஐ நெட் பேங்கிங் (ICICI Net Banking) பரிவர்த்தனைகளை பயன்படுத்தி எம்ஐ.காம் வழியாக வாங்கினால் ரூ.2,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும் ரூ.2,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் (Exchange Bonus) கிடைக்கும். இதன் மூலம் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனின் இறுதி விலையை ரூ.12,999 ஆக குறைக்கலாம்.

இதேபோல், ரெட்மி நோட் 12 5ஜி-யின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷனையும் நீங்கள் சலுகை விலையின் கீழ் வாங்கலாம். இவ்விரு ஆப்ஷன்களுமே ஃப்ரோஸ்டட் க்ரீன் (Frosted Green), மேட் பிளாக் (Matte Black) மற்றும் மிஸ்டிக் ப்ளூ (Mystique Blue) என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது,

அம்சங்களை பொறுத்தவரை, முன்னரே குறிப்பிட்டபடி இது ரெட்மி நோட் சீரிஸின் கீழ் அறிமுகமான மிகவும் மெலிதான ஸ்மார்ட்போன் (Sllimmest Redmi Note Phone) ஆகும். அளவீட்டில் இது வெறும் 7.6மிமீ மட்டுமே உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட எம்ஐயுஐ13 மூலம் இயங்குகிறது. இது 120ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் வரையிலான ஆதரவுடன் 6.67-இன்ச் ஃபுல் எச்டி அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 (Qualcomm Snapdragon 4 Gen 1) ப்ராசஸர் மற்றும் அட்ரெனோ 619 ஜிபியு (Adreno 619 GPU) உடன் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 48 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் உள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பீ சென்சார் உள்ளது. கடைசியாக இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

Best Mobiles in India

English summary
One of the Slimmest Phone Redmi Note 12 5G get New Offer Available to Buy Under Super Discount Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X