Vivo-கிட்ட இருந்து இதை யாருமே எதிர்பார்க்கல.. சூப்பர் பட்ஜெட் விலையில் புது 5G போன்.. நம்பி ஆர்டர் போடலாமா?
'அவுட் ஆஃப் சிலபஸ்' என்று கூறுவார்கள் இல்லையா? அதாவது "இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே" என்று கூறும்படியாக 'சர்ப்ரைஸ்' ஆக அல்லது 'ஷாக்கிங்' ஆக சில விஷயங்கள் நடக்குமல்லவா? அப்படியான ஒரு விஷயம் தான் விவோ டி2எக்ஸ் 5ஜி போனின் இந்திய அறிமுகம்!
ஒருபக்கம் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல்லின் 5ஜி சேவைகளானது, நாடு முழுவதும் மிகவும் வேகமாக விரிவடைந்து வருகிறது. மறுகையில் 4ஜி போன் வைத்து இருக்கும் அனைவரின் மனதிலும் புதிய 5ஜி போன் வாங்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கிக் கொண்டே போகிறது.

இந்த சூழ்நிலையை சரியாக பயன்படுத்தி லாபம் பார்க்க வேண்டுமென்றால், பட்ஜெட் விலையில் தரமான 5ஜி போன்களை அறிமுகம் செய்ய வேண்டும். அந்த நோக்கத்தின் கீழ் பல நிறுவனங்கள் ரூ.10,000 - ரூ,12,000 க்குள் வாங்க கிடைக்கும் 5ஜி போன்களில் தீயாக வேலை செய்து வருகின்றன.
அப்படியான ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் விவோ நிறுவனத்திடம் இருந்து யாருமே எதிர்பார்க்கவில்லை. அதுதான் விவோ டி2எக்ஸ் 5ஜி (Vivo T2x 5G). இது விவோ பிராண்டின் கீழ் வாங்க கிடைக்கும் மிகவும் மலிவான 5ஜி போன் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் வாங்க கிடைக்கும் விலை குறைவான 5ஜி போன்களிலும் ஒன்றாகும்!
இது கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகமான விவோ டி2 (Vivo T2) சீரீஸின் கீழ் வெளியான 2 போன்களில் ஒன்றாகும். அறியாதோர்களுக்கு இதனுடன் விவோ டி2 5ஜி அறிமுகமானது. இந்த இரண்டில் விவோ டி2எக்ஸ் 5ஜி போனின் இந்திய விற்பனை இன்று முதல் (ஏப்ரல் 21) தொடங்கியுள்ளது.
விவோ டி2எக்ஸ் 5ஜி போனின் அசல் விலை என்ன? ஆஃபர் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இந்த போனை நம்பி வாங்கலாமா? விவோ டி2எக்ஸ் 5ஜி-க்கு பதிலாக வேறு என்னென்ன போன்களை கருத்தில் கொள்ளலாம்? அவைகளின் விலை நிர்ணயம் என்ன? இதோ விவரங்கள்:
அசல் விலையும் ஆஃபர் விலையும்: இந்த போன் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகி உள்ளது; 4ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.12,999 க்கும், 6ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.13,999 க்கும் மற்றும் மற்றும் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.15,999 க்கும் அறிமுகமாகி உள்ளது.
அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் பட்சத்தில் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். கூடுதலாக இந்த போனை விவோ ஸ்டோர் வழியாக வாங்கினால் விவோ கலர் இயர்போன்ஸ் இலவசமாக கிடக்கும். தவிர இது பிளிப்கார்ட் (Flipkart) வழியாகவும் வாங்க கிடைக்கும்.
விவோ டி2எக்ஸ் 5ஜி முக்கிய அம்சங்கள்: இது 6.58-இன்ச் எல்சிடி டிஸ்பிளே, மீடியாடெக் டைமென்சிட்டி 6020 ப்ராசஸர், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஃபன்டச்ஓஎஸ் 13, 50எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா, 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் போன்றவைகளை கொண்டுள்ளது.
விவோ டி2எக்ஸ் 5ஜி போனை நம்பி வாங்கலாமா? ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் - அம்சங்கள் அடிப்படையில் இது நன்றாகவே இருக்கிறது. குறிப்பாக இது இந்திய சந்தையில் வாங்க கிடைக்கும் மிகவும் மலிவான 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும் என்பதால் பட்ஜெட் வாசிகள் இதை நிச்சயம் கருத்தில் கொள்ளலாம்.
விவோ டி2எக்ஸ் 5ஜி-க்கு பதிலாக வேறென்ன போன்களை வாங்கலாம்? இந்த போனிற்கு சரியான மாற்று என்றால் இன்பினிக்ஸ் ஹாட் 20 (Infinix Hot 20) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஃப்14 (Samsung Galaxy F14) ஸ்மார்ட்போன்களை கூறலாம். முந்தையது ரூ.11,999 க்கும், பிந்தையது ரூ.14,490 க்கும் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications