நவ.17 க்கு பிறகு.. புது Phone வாங்க போற யாராலுமே இந்த 2 Realme மாடல்களையும் தவிர்க்க முடியாது! ஏன்?

|

வருகிற நவம்பர் 17 ஆம் தேதியன்று இரண்டு முக்கியமான ரியல்மி (Realme) ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகிறது.

அந்த ஸ்மார்ட்போன்கள் எவ்வளவு முக்கியமான மாடல்கள் என்றால் - நவம்பர் 17 ஆம் தேதிக்கு பின்னர் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்க நினைக்கும் அனைவருமே அந்த 2 ரியல்மி மாடல்களையும் தவிர்க்கவே முடியாது!

பில்ட்-அப் செய்யும் அளவிற்கு அப்படி என்ன ஸ்பெஷல்? அதென்ன மாடல்கள்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

அதென்ன மாடல்கள்?

அதென்ன மாடல்கள்?

நாம் இங்கே பேசுவது ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 10 ப்ரோ சீரீஸ் ஸ்மார்ட்போன்களை பற்றித்தான்!

அதாவது ரியல்மி 10 ப்ரோ (Realme 10 Pro) மற்றும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் (Realme 10 Pro Plus) மாடல்களை பற்றித்தான்!

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வருகிற நவம்பர் 17 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்பட உள்ளன.

சரசரவென விலை குறைந்த ரூ.30,000 போன்கள்! அதுவும் 1 இல்ல.. மொத்தம் 5 மாடல்கள்! இதோ லிஸ்ட்!சரசரவென விலை குறைந்த ரூ.30,000 போன்கள்! அதுவும் 1 இல்ல.. மொத்தம் 5 மாடல்கள்! இதோ லிஸ்ட்!

இந்த போன்களில் அப்படி என்ன ஸ்பெஷல்?

இந்த போன்களில் அப்படி என்ன ஸ்பெஷல்?

கடந்த சில வாரங்களாகவே இந்த இரண்டு போன்களும் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும் என்கிற விவரங்கள் வெளியான வண்ணம் உள்ளன.

முதலில் இந்த இரண்டுமே 5ஜி ஸ்மார்ட்போன்களாக வரும் என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் ப்ரோ பிளஸ் மாடலில் கர்வ்டு டிஸ்பிளே இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ஒரு லேட்டஸ்ட் போஸ்டர் ஆனது ரியல்மி 10 ப்ரோ சீரீஸின் மற்றொரு முக்கியமான அம்சத்தை வெளிப்படுத்தி உள்ளது!

அதென்ன அம்சம்?

அதென்ன அம்சம்?

ரியல்மி நிறுவனம் வழியாக வெளியான போஸ்டர் ஆனது வரவிருக்கும் ரியல்மி 10 ப்ரோ மற்றும் 10 ப்ரோ பிளஸ் மாடல்கள் ஆனது நிறுவனத்தின் லேட்டஸ்ட் Realme UI 4.0 உடன் அறிமுகமாகும் என்பதை வெளிப்படுத்துகிறது.

ஆக Realme 10 Pro சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது ரியல்மி யூஐ 4.0 அப்டேட் வழியாக அணுக கிடைக்கும் - புதிய ஐகான் டிஸைன்களுடன் வரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இனிமேல் டபுள் கேம் ஆடலாம்.. சைக்கிள் கேப்ல WhatsApp செட்டிங்ஸ்-க்குள் புகுந்த புதிய Mode!இனிமேல் டபுள் கேம் ஆடலாம்.. சைக்கிள் கேப்ல WhatsApp செட்டிங்ஸ்-க்குள் புகுந்த புதிய Mode!

அதுமட்டுமல்ல!

அதுமட்டுமல்ல!

லேட்டஸ்ட் ரியல்மி யூஐ 4.0 அப்டேட் வழியாக, இன்-பில்ட் ஆப்களுக்கான 30 புதிய ஐகான் டிஸைன்களுடன் சேர்த்து ஸ்மார்ட் ஆல்வேஸ்-ஆன்-டிஸ்ப்ளே (Smart Always-On-Display) என்கிற அம்சமும் அணுக கிடைக்கும்.

இந்த இரண்டு புதிய அம்சங்களையும் தவிர்த்து - வெளியான போஸ்டர் வழியாக - வேறு எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை.

ரியல்மி யூஐ 4.0 ஆனது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட அப்டேட் ஆக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது!

ரியல்மி 10 ப்ரோவில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

ரியல்மி 10 ப்ரோவில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி+ OLED டிஸ்ப்ளேவை பேக் செய்யும். இது 90Hz அல்லது அதை விட மேம்பட்ட ரெஃப்ரெஷ் ரேட்-ஐ வழங்கலாம்!

ப்ரோ மாடலில் டூயல் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும். அதில் 16MP + 2MP சென்சார்கள் இருக்கலாம். முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் 16MP செல்பீ கேமரா இடம்பெறலாம்!

உடனே தூக்கி போட்ருங்க! உங்கள் வீட்டில் வைத்து இருக்கவே கூடாத 8 பழைய பொருட்கள்! ஏன்? என்ன காரணம்?உடனே தூக்கி போட்ருங்க! உங்கள் வீட்டில் வைத்து இருக்கவே கூடாத 8 பழைய பொருட்கள்! ஏன்? என்ன காரணம்?

Realme 10 Pro-வின் எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயம் என்ன?

Realme 10 Pro-வின் எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயம் என்ன?

5,000mAh பேட்டரியுடன் Qualcomm Snapdragon 695 SoC மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது கண்டிப்பாக ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் வரும். ஆனால் அது 65W ஆக இருக்குமா அல்லது அதை விட குறைவானதாக இருக்குமா என்பது பற்றி தகவல்கள் இல்லை!

எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது ரூ.20,000 என்கிற பட்ஜெட்டின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம்.

ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

Realme 10 Pro+ ஸ்மார்ட்போன் ஆனது கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுவரும். இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடனான 6.7 இன்ச் அளவிலான OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும்.

நிறுவனத்தின் கூற்றுப்படி, ப்ரோ பிளஸ் மாடலில் 2.33 மிமீ என்கிற அளவிலான மிகவும் மெல்லிய பெசல்களை கொண்ட பஞ்ச்-ஹோல் பேனல் இருக்கும்.

கேமராக்களை பொறுத்தவரை, இது 108MP மெயின் கேமரா + 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் + 2MP என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். முன்பக்கத்தில் 16MP செல்பீ கேமரா இருக்கும்.

ஜஸ்ட் மிஸ்.. பூமிக்கு மேலே விழுந்த ஓட்டை.. உள்ளே புகுந்த விசித்திரமான ஒளி.. நவ.3 இரவு நடந்தது என்ன?ஜஸ்ட் மிஸ்.. பூமிக்கு மேலே விழுந்த ஓட்டை.. உள்ளே புகுந்த விசித்திரமான ஒளி.. நவ.3 இரவு நடந்தது என்ன?

Realme 10 Pro Plus-இன் எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயம் என்ன?

Realme 10 Pro Plus-இன் எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயம் என்ன?

லேட்டஸ்ட் MediaTek Dimensity 1080 SoC, 12GB வரையிலான ரேம் மற்றும் 256GB வரையிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ், 5,000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் ஆனது ரூ.25,000 என்கிற பட்ஜெட்டை சுற்றிய விலையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

நவம்பர் 17 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகும் இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே கூடிய விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால், இந்தியாவில் ஏற்கனவே 5ஜி போன்களுக்கான தேவை உச்சத்தில் உள்ளது!

Photo Courtesy: Realme

Best Mobiles in India

English summary
One more good news Realme 10 pro series come with latest realme UI 4 0 launching on november 17th

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X