Home
Mobile

டியர் சைனீஸ் கம்பெனிகளே.. கொஞ்சம் கேப்பு விடுங்க.. இந்தியாவில் ரூ.10,000-க்கு இன்னொரு 5G Phone.. என்ன மாடல்?

அடேய்.. சைனீஸ் கம்பெனிகளா.. கொஞ்சம் கேப்பு விடுங்கப்பா.. எதை வாங்குறதுன்னு முடிவு செய்யவாவது கொஞ்சம் கேப்பு விடுங்கப்பா என்று கஸ்டமர்களே கலாய்க்கும் அளவிற்கு.. கடந்த சில நாட்களில் பல "பட்ஜெட்-விலை" 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகி விட்டன. கடந்த ஜூலை 15 ஆம் தேதி ரூ.10,499 க்கு ஐக்யூ இஸட்9 லைட் 5ஜி (iQOO Z9 Lite 5G), அதற்கு முன் சிஎம்எப் போன் 1 (CMF Phone 1), ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G) முறையே ரூ.15,999 க்கும், ரூ.13,999 க்கும் அறிமுகமாகின.

சீன நிறுவனங்களுக்கு போட்டியாக "நாங்களும் ஏரியாவுல பெரிய ஆள்தான்பா!" என்கிற பாணியில் இந்திய மொபைல் பிராண்ட் ஆன லாவா அதன் பிளேஸ் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.13,999 க்கு அறிமுகம் செய்துள்ளது. இதற்கிடையில் அதைவிட மலிவான விலைக்கு.. ஒப்போ நிறுவனம் அதன் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது என்ன மாடல்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:

கொஞ்சம் கேப்பு விடுங்க.. ரூ.10,000 க்கு இன்னொரு 5G Phone.. என்ன மாடல்?

என்ன மாடல்? எப்போது அறிமுகமாகும்? நாம் இங்கே பேசுவது ஒப்போ ஏ3எக்ஸ் 5ஜி (Oppo A3X 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். ஒப்போவின் இந்த சூப்பர்-பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, இந்த ஜூலை மாத இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது உண்மையாகும் பட்சத்தில், கடந்த ஜூலை 2 ஆம் தேதி அறிமுகமான ஒப்போ ஏ3 2024 (Oppo A3 2024) மற்றும் கடந்த வாரம் அறிமுகமான ஒப்போ ரெனோ 12 சீரிஸ் (Oppo Reno 12 சீரீஸ்) ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து.. இந்த ஜூலை மாதம் ஒப்போ அறிமுகம் செய்யும் நான்காவது ஸ்மார்ட்போனாக இது இருக்கும்!

என்ன விலைக்கு வரும்? இந்தியாவில் ஒப்போ ஏ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ரூ.10,000 - ரூ.15,000 க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இது சிஎம்எப் போன் 1, ரெட்மி 13 5ஜி, ஐக்யூ இஸட்9 லைட் 5ஜி போன்ற மாடல்களுடன் நேரடியாக மோதுவதோடு மட்டுமில்லாமல் ரூ.17,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போனையும் வம்பிற்கு இழுக்கும் என்பது போல் தெரிகிறது.

என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஒப்போ ஏ3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (100 nits Peak Brightness) உடனான எல்சிடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். மேலும் இது 120ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட்டிற்கான (120Hz Refresh Rate) ஆதரவையு ம் கொண்டிருக்கும் என்று கூறுகிறது.

சிப்செட்டை பொறுத்தவரை, இது மீடியாடெக் டைமென்சிட்டி 6300 SoC-ஐ பேக் செய்யலாம். இதே சிப்செட்தான் ஐக்யூ இஸட்9 லைட் 5ஜி, விவோ டி3 லைட் 5ஜி (Vivo T3 Lite 5G) மற்றும் லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி (Lava Blaze X 5G) போன்ற பிற பட்ஜெட்-விலை 5ஜி ஸ்மார்ட்போன்களிலும் உள்ளது.

ஒப்போவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது: 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ், 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ். ஓஎஸ்-ஐ பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்ஓஎஸ் 14 உடன் இயங்கக்கூடும்.

கேமராக்களை பொறுத்தவரை, இது சிங்கிள் ரியர் கேமரா மற்றும் எல்இடி ஃபிளாஷ் உடன் வரும். அதில் 8 மெகாபிக்சல் கேமரா பேக் செய்யப்படலாம். முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா இருக்கலாம். பேட்டரியை பொறுத்தவரை 45W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,100mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். கடைசியாக தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கையும் பேக் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
One More Budget Price 5G Phone Coming to India All You Need to Know About Oppo A3X 5G
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X