ப்பா iQOO.. என்னா காம்பினேஷன்.. 7000mAh பேட்டரி, SD 8எஸ் ஜென் 4, OIS கேமரா, 120W சார்ஜிங்.. என்ன மாடல்?
7300எம்ஏஎச் மற்றும் 6500எம்ஏஎச் என இரண்டு "பிக் பேட்டரி" ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இந்திய சந்தையை அலறவிட்ட ஐக்யூ நிறுவனம், அதன் அடுத்த ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தை உறுதி செய்துள்ளது. சுவாரசியமாக இதுவும் பெரிய பேட்டரி உடன் வருகிறது. என்ன மாடல்? எப்போது அறிமுகம்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
என்ன மாடல்? அது ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10) ஸ்மார்ட்போனாகும். ஐக்யூ இந்தியா வலைத்தளம் மற்றும் அமேசானில் இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ டீஸர்கள் நேரலைக்கு வந்துள்ளதால், இது இன்னும் சில தினங்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்பது போல் தெரிகிறது.

என்னென்ன அம்சங்கள்? வெளியான டீஸர்கள் ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களை எடுத்துக்காட்டுகின்றன. முதல் டீஸர் "டூயல் சிப் பவர்" மற்றும் "விரைவில் வருகிறது" என்கிற டேக்லைனுடன்.. ஒயிட் ஆரஞ்சு டூயல் டோன் பினிஷ் உடனான ஐக்யூ இஸட் 10 ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை வெளிப்படுத்துகிறது. ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போனின் கேமரா யூனிட்டை சுற்றி ஒரு டைனமிக் லைட்டிங் எபெக்ட், ஹாலோ லைட் இருப்பது போல் தெரிகிறது
இரண்டாவது டீஸர், இரண்டு சிப்செட்களை டீஸ் செய்யும் மங்கலான பின்னணியை கொண்டுள்ளது, அதில் ஒன்று ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப் போல தோன்றுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில், ஐக்யூ நியோ 10 தான் இந்தியாவின் முதல் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 ஸ்மார்ட்போனாக இருக்கும். இது ஐக்யூ இஸட்10 டர்போ ப்ரோ மாடலின் மறுபெயரிடப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட வெர்ஷனாக இருக்கவும் வாய்ப்புள்ள.
ஐக்யூ இஸட்10 டர்போ ப்ரோவின் முக்கிய அம்சங்கள்:
- 1.5கே ரெசல்யூஷன்
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 6.78-இன்ச் OLED டிஸ்பிளே
ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட்
- ஃபன்டச் ஓஎஸ் 15
- OIS உடனான 50 மெகாபிக்சல் + 8 மெகாபிக்சல் (அல்ட்ரா-வைட்) டூயல் கேமரா செட்டப்
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 120W பாஸ்ட் சார்ஜிங்
- 7000mAh பேட்டரி
இந்தியாவில் ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? கடந்த பிப்ரவரியில் ரூ.29,999 க்கு அறிமுகமான ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போனை விட மேம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்டுள்ளதால், ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போனின் விலை நிச்சயமாக சுமார் ரூ.40,000 க்கு அருகில் தான் இருக்கும். ஒருவேளை உங்களுக்கு இந்த பட்ஜெட் "சரிப்பட்டு வராது" என்றால், சமீபத்தில் அறிமுகமான ஐக்யூ இஸட்10 5ஜி அல்லது ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி மாடல்களை கருத்தில் கொள்ளலாம்.
ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இந்தியாவில் ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது க்ளேசியர் சில்வர் மற்றும் ஸ்டெல்லர் பிளாக் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி மாடலின் விலை ரூ.21,999 என்றும், 8ஜிபி ரேம் + 256ஜிபி மாடலின் விலை ரூ.23,999 என்றும் மற்றும் டாப்-எண்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி மாடலின் விலை ரூ.25,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.13,499 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.14,999 க்கும் மற்றும் டாப்-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.16,499 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அல்ட்ராமரைன் மற்றும் டைட்டானியம் ஆகிய 2 கலர்களில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








