எகிறியது மவுசு.. Flipkart-ல் மீண்டும் விற்பனை.. ஆர்டர் மேல ஆர்டர்.. மிரட்டும் Motorola-வின் லேட்டஸ்ட் போன்!
கடந்த மே 16 அம தேதியன்று இந்தியாவில் அறிமுகமான ஒரு மோட்டோரோலா (Motorola) ஸ்மார்ட்போனானது.. முறையே மே 22 மற்றும் மே 31 ஆகிய தேதிகளில் விற்பனைக்கு வந்தும் கூட.. அதற்கு ஹெவி டிமாண்ட் இருந்த காரணத்தினால் "அடுத்த விற்பனை பின்னர் அறிவிக்கப்படும்" என்று கூறப்பட்டு இருந்தது. தற்போது அந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை இன்று (ஜூலை 5) மதியம் 12 மணி முதல் தொடங்கவுள்ளது. அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் விலை என்ன? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? இன்று மீண்டும் விற்பனைக்கு வருவது மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion) ஸ்மார்ட்போன் தான். அறிமுகமான நாளில் இருந்து அமோக விற்பனையை கண்டுவரும் இந்த ஸ்மார்ட்போன், இன்று மதியம் 12 மணி முதல் பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் வழியாக மீண்டும் விற்பனைக்கு வருகிறது.

ஹெவி டிமாண்ட் ஆகும் அளவிற்கு மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் அப்படி என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) உடனான 6.7-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் பிஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான மையுஎக்ஸ் (MyUX) கொண்டு இயங்குகிறது.
குவால்காம் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென்2 சிப்செட் (Qualcomm 4nm Snapdragon 7s Gen2 Chipset) மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் சோனி LYT-700C சென்சார் மற்றும் எப்/1.88 அபெர்க்ஷர் உடனான 50-மெகாபிக்சல் பிரைமரி கேமரா + 13-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா (எப்/2.2 அபெர்க்ஷர் - இது மேக்ரோ கேமராவாகவும் வேலை செய்யும்) உள்ளது. முன்பக்க கேமராவை பொறுத்தவரை 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, இது இணக்கமான டர்போபவர் சார்ஜிங் ப்ரிக்கை பயன்படுத்தி 68W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 5ஜி, 4ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.2, இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் போன்ற மற்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.
என்ன விலை? மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கும் வாங்க கிடைக்கும். விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, முதல் பிளிப்கார்ட் யுபிஐ பரிவர்த்தனைக்கு ரூ.50 உடனடி தள்ளுபடி, பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்ட்டை பயன்படுத்தினால் 5% கேஷ்பேக் உட்பட பல சலுகைகள் பட்டியலிடப்பட்டுள்ளது.
கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை, மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷனின் 2 ஸ்டரோஜ் ஆப்ஷன்களுமே வேகன் ஸ்கின் ஃபினிஷ் உடனான ஹாட் பிங்க் மற்றும் மார்ஷ்மெல்லோ ப்ளூ கலர்களில் வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் இன்னொரு கலர் ஆப்ஷனிலும் வாங்க கிடைக்கும். அது பாலிமெத்தில் மெதக்ரிலேட் (பிஎம்எம்ஏ) ஃபினிஷ் கொண்ட ஃபாரஸ்ட் ப்ளூ கலர் ஆகும்.
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ: சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமான மற்றொரு லேட்டஸ்ட் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் ஆன மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஜூலை 6 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.31,999 க்கும் (பாக்ஸில் 68W சார்ஜர்), 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.35,999 க்கும் (பாக்ஸில் 125W சார்ஜர்) வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








