சீன கம்பெனிகளை சிதற விடும் விலை.. இந்திய பிராண்டின் இன்னொரு தரமான பட்ஜெட் போன்!
சியோமி (Xiaomi), ரெட்மி (Redmi), ரியல்மி (Realme) போன்ற சீன நிறுவனங்களின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை (குறிப்பாக ரூ.10,000 க்குள் வாங்க கிடைக்கும் மாடல்களை) எல்லாம் சிதறவிடும் விலையில் இந்திய மொபைல் நிறுவனமான லாவா (Lava) ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.
நாம் இங்கே பேசுவது லாவா பிளேஸ் 2 (Lava Blaze 2) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இது அடுத்த மாதம் (அதாவது ஏப்ரல் 2023) இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது. இது என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

சீன நிறுவனங்கள் VS லாவா: கடந்த 2009 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உள்நாட்டு நிறுவனமான லாவா, ஆரம்பத்தில் இருந்தே பட்ஜெட் விலை மொபைல்களை அறிமுகம் செய்து வந்தாலும் கூட, இது சீன நிறுவனங்களிடம் இருந்து கொஞ்சம் ஒதுங்கியே இருந்தது. அதாவது சைனீஸ் போன்களுக்கு போட்டியான மாடல்களை களமிறக்காமலேயே இருந்தது.
பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டில் லாவா அதன் இஸட் சீரீஸ் (Lava Z Series) அறிமுகப்படுத்தியது. அதை தொடர்ந்து, கடந்த ஆண்டு லாவா பிளேஸ் 5ஜி (Lava Blaze 5G) என்கிற "பரபரப்பான" ஸ்மார்ட்போனை களமிறங்கியது. இது இந்தியாவில் வாங்க கிடைக்கும் மிகவும் மலிவான 5ஜி போன்களில் ஒன்றாக திகழ்கிறது!
லாவா பிளேஸ் 5ஜி-ஐ தொடர்ந்து லாவா பிளேஸ் 2: பட்ஜெட்-வாசிகள் மத்தியில் லாவா பிளேஸ் 5ஜி-க்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து லாவா நிறுவனம் அதன் பிளேஸ் 2- ஸ்மார்ட்போனை களமிறக்குகிறது. இது யுனிசாக் டி616 (Unisoc T616) ப்ராசஸர் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லாவா பிளேஸ் 2-வில் கிளாஸ் பேக் பேனல்: நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான முகுல் ஷர்மாவின் கூற்றுப்படி, லாவா பிளேஸ் 2-வின் பின்பக்கத்தில் கண்ணாடியால் செய்யப்பட்ட பேக் பேனல் (Glass Back Panel) இருக்கும். இது உண்மையாகும் பட்சத்தில் மற்ற பட்ஜெட் விலை மாடல்களுடன் ஒப்பிடுகையில், இது சற்றே பிரீமியம் லுக்கை வழங்கும்.
கிளாஸ் பேக் பேனலை தவிர்த்து இந்த ஸ்மார்ட்போனின் கேமரா ஐலேண்டில் 2 பெரிய வட்ட வடிவிலான கட்-அவுட்கள் உள்ளன. அதில் டூயல் ரியர் கேமரா செட்டப் பேக் செய்யப்படும்; அதனருகில் எல்இடி ஃபிளாஷ் ஒன்றும் இடம்பெறும். இருப்பினும் இது என்னென்ன சென்சார்களை பெறும் என்கிற தகவல்கள் இல்லை!
லாவா பிளேஸ் 2 விலை: இது ரூ.10,000 க்குள் என்கிற விலைப்பிரிவின் கீழ் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லாவா பிளேஸ் 2 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் மிகவும் நெருக்கமாக இருப்பதால், இதன் முக்கிய அம்சங்கள் ஒவ்வொன்றாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
லாவா பிளேஸ் 5ஜி விலை: கிளாஸ் ப்ளூ, கிளாஸ் பிளாக், கிளாஸ் ரெட், கிளாஸ் க்ரீன் என்கிற 4 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் லாவா பிளேஸ் 5ஜி போனின் விலை ரூ.8,699. இது 3ஜிபி ரேம் (3ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் விலையாகும்.


Click it and Unblock the Notifications








