Amazon Prime Day Sale-ல் இந்த 2 OnePlus போன்கள் மீதும் மரண ஆபர்.. ரூ.5000 விலை குறைப்பு.. ரூ.3000 டிஸ்கவுண்ட்!
இந்நேரம் உங்களில் பலருக்கும் அமேசான் இந்தியா வலைத்தளத்தின் அடுத்த சிறப்பு விற்பனை என்ன? து எப்போது நடக்கும் என்கிற தேதிகள் மனப்பாடம் ஆகி இருக்கலாம். அந்த அளவிற்கு அமேசான் ப்ரைம் டே சேல் (Amazon Prime Day Sale) குறித்த விளம்பரங்கள் பட்டிதொட்டி எங்கும் பறக்கிறது. அமேசானின் ப்ரைம் டே விற்பனையானது ஜூலை 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெறும்படி திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமான அமேசான் விற்பனைகளை போலவே, இந்த விற்பனையிலும் பல பிரபலமான ஸ்மார்ட்போன்கள் மீது நம்ப முடியாத டிஸ்கவுண்ட்கள் கிடைக்க உள்ளது!
ஒருவேளை உங்களுடைய கவனம் முழுக்க ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மீது மட்டுமே இருக்கிறது என்றால்.. ஒன்பிளஸ் 12 (OnePlus 12) மற்றும் ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) ஸ்மார்ட்போன்கள் மீது கிடைக்கவிருக்கும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் ஆனது முழுக்க முழுக்க உங்களுக்கானதாக இருக்கலாம்!

ஒன்பிளஸ் 12 மீதான தள்ளுபடி மற்றும் சலுகைகள்: அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் மீது ரூ.5,000 நேரடி தள்ளுபடி கிடைக்கும். அதாவது இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.53,000 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.65,000 க்கும் வாங்க கிடைக்கும்.
இதுதவிர்த்து ஐசிஐசிஐ மற்றும் ஒன்கார்டு பயனர்களுக்கு ரூ.7,000 தள்ளுபடியும் கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் அறிமுகத்தின் போது இவ்விரு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களும் முறையே ரூ.64,999 மற்றும் ரூ.69,999 க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. ஒன்பிளஸ் 12 ஆனது ஸ்கை பிளாக், க்ளேஷியல் ஒயிட் மற்றும் ப்ளோயி எமரால்ட் ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும்.

ஒன்பிளஸ் 12ஆர் மீதான தள்ளுபடி மற்றும் சலுகைகள்: அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் ஒன்பிளஸ் பட்ஸ் 3 (OnePlus Buds 3) இயர்பட்ஸ் ஆனது முற்றிலும் இலவசமாக கிடைக்கும். மேலும் ஐசிஐசிஐ மற்றும் ஒன் கார்டு பயனர்களுக்கு ரூ.3,000 வரையிலான தள்ளுபடியும் கிடைக்கும்.
தள்ளுபடிகளுக்கு பிறகு ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.42,999 மற்றும் ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கும். பேஸிக் ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆன 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷனை ரூ.2,000 தள்ளுபடிக்கு பிறகு ரூ.37,999 க்கு வாங்கலாம்.

நினைவூட்டும் வண்ணம் அறிமுகத்தின் போது, மேற்கண்ட 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களும் முறையே ரூ.39,999, ரூ.42,999 மற்றும் ரூ.45,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டன. ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் ஆனது அயர்ன் கிரே, கூல் ப்ளூ மற்றும் மிகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சன்செட் டூன் என மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்.
மேற்கண்ட நேரடி தள்ளுபடி மற்றும் வங்கி தள்ளுபடிகளை தவிர்த்து, 12 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ, ஜியோ பிளஸ் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் ரூ.2250 மதிப்புள்ள பலன்கள், 6 மாதங்கள் வரை 100ஜிபி கூகுள் க்ளவுட் ஒன் ஸ்டோரேஜ் மற்றும் 3 மாதங்கள் வரையிலான யூட்யூப் பிரீமியம் (YouTube Premium) போன்ற பிற சலுகைகளும் கிடைக்கும்.
அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது வேறு என்னென்ன ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் மீது தள்ளுபடி கிடைக்கும்? ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.3000 தள்ளுபடியை பெற்று ரூ.24,999 க்கு பதிலாக ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி (OnePlus Nord CE 4 Lite 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.2000 தள்ளுபடியை பெற்று ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கும். ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) ஆனது ரூ.1,39,999 க்கு பதிலாக ரூ.20,000 தள்ளுபடியை பெற்று ரூ.1,19,999 க்கு வாங்க கிடைக்கும். கடைசியாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 (OnePlus Nord CE 3) ஸ்மார்ட்போன் ரூ.26,999 க்கு பதிலாக ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








