ரூ.12,000 முதல் ரூ.49,999 வரை.. டிச.1 மற்றும் டிச.2-இல் அடுத்தடுத்து அறிமுகமாகும் ஐந்து புதிய 5G போன்கள்!

|

வருகிற டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில்.. வெவ்வேறு நிறுவனங்களை சேர்ந்த 5 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இன்னொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால் - குறிப்பிட்ட தேதிகளில் அறிமுகம் செய்யப்படவுள்ள 5 மாடல்களுமே 5ஜி ஸ்மார்ட்போன்கள் (5G Phones) ஆகும்!

அதென்ன ஸ்மார்ட்போன்கள்? அந்த ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம் என்ன? இதோ விவரங்கள்:

01. Xiaomi 13 5G

01. Xiaomi 13 5G

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, டிசம்பர் 1 ஆம் தேதியன்று அதன் Xiaomi 13 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது.

அதில் வெண்ணிலா மாடல் ஆன Xiaomi 13 ஆனது 120Hz என்கிற ரெஃப்ரெஷ் ரேட்-ஐ வழங்கும் 6.2 இன்ச் அளவிலான AMOLED டிஸ்ப்ளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது IP68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஆதரவு மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஆக்டா-கோர் ப்ராசஸர் போன்ற அம்சங்களையும் பேக் செய்யலாம்!

இனிமேல் WhatsApp-ல ஒருத்தர பிளாக் பண்ணுறதுக்கு பதிலா.. இப்படி பண்ணுங்க.. வாழ்க்கையே வெறுத்துடுவாங்க!இனிமேல் WhatsApp-ல ஒருத்தர பிளாக் பண்ணுறதுக்கு பதிலா.. இப்படி பண்ணுங்க.. வாழ்க்கையே வெறுத்துடுவாங்க!

சியோமி 13 5ஜி: என்ன விலைக்கு வரும்?

சியோமி 13 5ஜி: என்ன விலைக்கு வரும்?

சியோமி 13 ஸ்மார்ட்போனின் மெயின் கேமராவானது - 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 800 சீரிஸ் லென்ஸுடன் வர வாய்ப்புள்ளது. மேலும் இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பெரிய பேட்டரியையும் பேக் செய்யும்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, சியோமி 13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.31,990 க்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

02. Xiaomi 13 Pro 5G

02. Xiaomi 13 Pro 5G

சியோமி 13 ப்ரோ - அதே டிசம்பர் 1 ஆம் தேதி அறிமுகமாகும் இன்னொரு 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். இது 2K ரெசல்யூஷனை வழங்கும் 6.7 இன்ச் அளவிலான E6 LTPO டிஸ்ப்ளேவை பேக் செய்யும் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இதுவும் கூட Snapdragon 8 Gen 2 SoC மூலம் இயக்கப்படும். கேமராக்களை பொறுத்தவரை, இதில் 50 மெகாபிக்சல் Sony IMX989 மெயின் சென்சார் + 50எம்பி இரண்டாம் நிலை கேமரா + 50எம்பி மூன்றாம் நிலை கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

Redmi அங்குட்டு போ.. Realme இங்குட்டு போ! வெறும் ரூ.14,799 க்கு புது மாடலை இறக்கிவிட்ட OnePlus!Redmi அங்குட்டு போ.. Realme இங்குட்டு போ! வெறும் ரூ.14,799 க்கு புது மாடலை இறக்கிவிட்ட OnePlus!

சியோமி 13 ப்ரோ 5ஜி: என்ன விலைக்கு வரும்?

சியோமி 13 ப்ரோ 5ஜி: என்ன விலைக்கு வரும்?

மேம்படுத்தப்பட்ட கேமரா செயல்திறனுக்காக சர்ஜ் சி2 இமேஜ் சிக்னல் ப்ராசஸர் (Surge C2 image signal processor - ISP) உடன் வரும் இந்த சியோமி 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவையும் கொண்டிருக்கும். கடைசியாக இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,800mAh பேட்டரியை பேக் செய்யலாம்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, சியோமி 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.41,990 க்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

03. Infinix Hot 20 5G

03. Infinix Hot 20 5G

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை டிசம்பர் 1 ஆம் தேதி வெளியிட உள்ளது. அது இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி மாடல் ஆகும்.

இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.6-இன்ச் FHD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட், 7ஜிபி ரேம் வரை (விர்ச்சுவல் ரேம் உட்பட), ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ், 12 5ஜிபேண்ட்களுக்கான ஆதரவு, 50MP டூயல் ரியர் கேமரா செட்டப், 8MP செல்பீ கேமரா போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும்

இந்த விவரம் தெரிஞ்ச யாருமே 2023 ஆரம்பிக்கிற வரை.. புது Phone வாங்க மாட்டாங்க! என்னது அது?இந்த விவரம் தெரிஞ்ச யாருமே 2023 ஆரம்பிக்கிற வரை.. புது Phone வாங்க மாட்டாங்க! என்னது அது?

இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி: என்ன விலைக்கு வரும்?

இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி: என்ன விலைக்கு வரும்?

18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்யும் Infinix Hot 20 ஆனது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் ஃபிரிண்ட் சென்சாரையும் கொண்டிருக்கலாம்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.12,000 க்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

04. iQOO 11 5G

04. iQOO 11 5G

5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்பட்டுள்ள அதீத தேவையை மனதிற்கொண்டு பிரபல சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களில் ஒன்றான ஐக்யூ, டிசம்பர் 2 ஆம் தேதியன்று ஐக்யூ 11 (iQOO 11) என்கிற புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் அளவிலான FHD+ AMOLED டிஸ்ப்ளேவை பேக் செய்யும் என்றும், அது 144 ஹெர்ட்ஸ் அல்ட்ரா-ஹை ரெஃப்ரெஷ் ரேட்டிற்கான சப்போர்ட் உடன் வரும் என்றும் கூறப்படுகிறது.

பங்கம் செய்த சிங்கத்தின் பிள்ளை.. Airtel யூசர்களே மனச கல் ஆக்கிக்கோங்க.. இல்ல Jio-க்கு மாறிடுங்க!பங்கம் செய்த சிங்கத்தின் பிள்ளை.. Airtel யூசர்களே மனச கல் ஆக்கிக்கோங்க.. இல்ல Jio-க்கு மாறிடுங்க!

ஐக்யூ 11 5ஜி: என்ன விலைக்கு வரும்?

ஐக்யூ 11 5ஜி: என்ன விலைக்கு வரும்?

இதுவொரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போனாக மட்டுமின்றி, ஒரு நல்ல கேமரா ஸ்மார்ட்போனாகவும் இருக்கும். ஏனென்றால், இது 50MP மெயின் கேமரா + 13MP அல்ட்ரா-வைட் கேமரா + 8MP மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பையும், முன்பக்கத்தில் 16MP செல்பீ கேமராவையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஐக்யூ 11 5ஜி ஆனது ரூ.49,999 க்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

05. iQOO Neo 7 SE

05. iQOO Neo 7 SE

டிசம்பர் 2 ஆம் தேதியன்று ஐக்யூ நிறுவனத்தின் ஐக்யூ 11 5ஜி ஸ்மார்ட்போன் மட்டுமல்ல, ஐக்யூ நியோ 7 எஸ்இ (iQOO Neo 7 SE) என்கிற ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும்.

அம்சங்களை பொறுத்தவரை, இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட்-ஐ பேக் செய்யும் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இது 64MP மெயின் கேமரா + 2MP போர்ட்ரெய்ட் சென்சார் + 2MP மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும்.

ஐக்யூ நியோ 7 எஸ்இ: என்ன விலைக்கு வரும்?

ஐக்யூ நியோ 7 எஸ்இ: என்ன விலைக்கு வரும்?

12GB வரை ரேம் மற்றும் 256GB வரையிலான UFS 3.1 ஸ்டோரேஜை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 எஸ்ஓசி உடன் இணைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது ரூ.22,790 க்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

Best Mobiles in India

English summary
On 2022 December 1st and 2nd Totally 5 New Smartphones are launching and all of them are 5G Phones

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X