Home
Mobile

DSLR லெவல்ல இருக்குமோ.. போட்டோகிராபி கிட் வருது.. 64MP பெரிஸ்கோப்.. 50MP ஓம்னிவிஷன் மெயின் கேமரா.. எந்த மாடல்?

பிரீமியம் கேமரா அவுட்புட் கொடுக்கும்படி சென்சார்கள் மட்டுமல்லாமல், கஸ்டமைஸ்டு ப்ரோபஸ்னல் போட்டோகிராபி கிட்டுடன் நுபியா இசட்70எஸ் போட்டோகிராபர் எடிஷன் (Nubia Z70S Ultra Photographer Edition) களமிறங்கி இருக்கிறது. இதுபோக ஓஎல்இடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட், 6600mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. இந்த நுபியா போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த போனில் 35 எம்எம் போகல் லென்த் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் லைட் & ஷேடோ மாஸ்டர் 900 சென்சாரும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜியும் கிடைக்கிறது. இதுபோக ஓம்னிவிஷன் ஓவி50டி (OmniVision OV50D) சென்சாருடன் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 2.5cm மேக்ரோ ஆப்ஷன் வருகிறது.

DSLR லெவல்ல இருக்குமோ.. போட்டோகிராபி கிட் வருது.. 64MP பெரிஸ்கோப்!

64 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவானது, ஓம்னிவிஷன் ஓவி64பி (OmniVision OV64B) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜியுடன் கிடைக்கிறது. மேலும், ஓம்னிவிஷன் ஓவி16ஏ1கியூ (OmniVision OV16A1Q) சென்சாருடன் அண்டர் டிஸ்பிளே செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இதன் ரியர் கேமராவுக்கு கஸ்டமைஸ்டு போட்டோகிராபி கிட் கிடைக்கிறது.

இதில் டி-மவுண்ட் அடாப்டர், 67எம்எம் ஃபில்டர்கள் மற்றும் என்டி ஃபில்டர்கள் கிடைக்கின்றன. அதேபோல பிசிகல் ஷட்டர் பட்டன், ஹைல்ப்-பிரஸ் போகஸ் போன்ற கன்ட்ரோல்களும் கிடைக்கின்றன. இந்த போட்டோகிராபி கிட் கிளாசிக் லுக் கொடுக்கிறது. ஆகவே, கேமரா பிரியர்களிடையே வரவேற்பு பெற வாய்ப்புள்ளது. இப்போது மற்ற பீச்சர்களை பார்ப்போம்.

நுபியா இசட்70எஸ் போட்டோகிராபர் எடிஷன் அம்சங்கள் (Nubia Z70S Ultra Photographer Edition Specifications): இந்த பிரீமியம் போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு நெபுளா ஏஐஓஎஸ் (Nebula AIOS) கொண்ட ஆக்டா கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Octa Core 3nm Snapdragon 8 Elite SoC) சிப்செட் கிடைக்கிறது. அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) மற்றும் 4 வேரியண்ட்கள் உள்ளன.

ஆகவே, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி மற்றும் 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்கின்றன. 6.85 இன்ச் (2688 x 1216 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த பிஓஈ கியூ9பிளஸ் (BOE Q9+) டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

மேலும், 960Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2592Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. இந்த நுபியா இசட்70எஸ் போட்டோகிராபர் எடிஷன் போனில் 6600mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers), டிடிஎஸ்:எக்ஸ் அல்ட்ரா (DTS:X ULTRA) மற்றும் டூயல் எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார்ஸ் (Dual X-axis Linear Motors) கிடைக்கிறது.

இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஆரம்ப வேரியண்ட்டின் விலை ரூ.53,661ஆக இருக்கிறது. அதேபோல 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.73,502ஆக இருக்கிறது. போட்டோகிராபி கிட்டின் விலை ரூ.10,490ஆக இருக்கிறது. சீனாவில் வெளியாகி இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nubia Z70S Ultra Photographer Edition With Customized Professional Photography Kit Announced
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X