Home
Mobile

நிஜமா தான் சாமி.. nubia Z70 Ultra போன்ல கேமராவை ஒளிச்சுவச்சிருக்காங்க.. இந்த பவர்ஃபுல் Mobile என்ன விலை?

நுபியா (Nubia) நிறுவனம் இன்று அதன் புதிய லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் சாதனமான நுபியா Z70 அல்ட்ரா (nubia Z70 Ultra) ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் சீன சந்தையில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போனை நிறுவனம் இப்போது உலக சந்தையில் பெருமிதத்துடன் அறிமுகம் செய்துள்ளது. நுபியாவின் பெருமிதத்திற்கு காரணம், இது ஒரு ஒரிஜினல் ஃபுள் டிஸ்பிளே (original full display) ஸ்மார்ட்போன் ஆகும். அதாவது நாட்ச் எதுவும் இல்லாத அண்டர் டிஸ்பிளே ஸ்மார்ட்போனாக (under display smartphone) வெளிவந்துள்ளது.

நிஜமா தான் சாமி.. nubia Z70 Ultra போன்ல கேமராவை ஒளிச்சுவச்சிருக்காங்க:

சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நுபியா Z70 அல்ட்ரா போனிற்கும் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நுபியா Z70 அல்ட்ரா (nubia Z70 Ultra) போன் இரண்டும் ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டுள்ளது. இது பிளாக் (Black), எல்லோவ் (Yellow) மற்றும் ப்ளூ ஸ்டாரி நைட் எடிஷன் (Blue Starry Night Edition) ஆகிய மாடல்களாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

நிஜமா தான் சாமி.. nubia Z70 Ultra போன்ல கேமராவை ஒளிச்சுவச்சிருக்காங்க

நுபியா Z70 அல்ட்ரா சிறப்பம்சம் (nubia Z70 Ultra Specifications):

புதிய நுபியா Z70 அல்ட்ரா (nubia Z70 Ultra) ஸ்மார்ட்போன் சாதனம் 6.85" இன்ச் அளவு கொண்ட 2688×1216 பிக்சல் (pixels) உடைய 1.5K OLED BOE Q9+ டிஸ்பிளேவை (display) கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 144Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) ஆதரவுடன், 960Hz டச் சாம்ப்ளிங் ரேட் (touch sampling) 10 பிட் கலர் டெப்த் (10 bit கலர் depth) தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.

இந்த nubia Z70 Ultra சாதனம் DCI-P3 கலர் காமெட் (color gamut), 2000நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (nits peak brightness) ஆதரவுடன் DC டிமிங் (dimming), 2592Hz PWM டிமிங் அம்சங்களை (PWM dimming) ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் மிகவும் சக்தி வாய்ந்த ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை (Octa Core Snapdragon 8 Elite chipset) கொண்டு இயங்குகிறது.

நுபியா Z70 அல்ட்ரா ஸ்டோரேஜ் (nubia Z70 Ultra Storage):

இது அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) உடன் 12GB / 16GB / 24GB LPDDR5X ரேம் (RAM) அம்சத்துடன் 256GB / 512GB / 1TB UFS 4.0 ஸ்டோரேஜ் (storage) உடன் வெளிவந்துள்ளது. ஆண்ட்ராய்டு 15 உடன் நெபுலா ஏஐ ஓஎஸ் (Android 15 with Nebula AIOS) இந்த இந்த சாதனம் இயங்குகிறது.

கேமரா அம்சத்தை பற்றி பேசுகையில், 50MP கொண்ட 1/1.56″ இன்ச் சோனி IMX906 சென்சார் உடன் f/1.59-f/4.0 அபெச்சர் உடன் OIS ஆதரவை கொண்ட மெயின் கேமராவை கொண்டுள்ளது. 50MP 120 டிகிரி ஆம்னிவிஷன் OV50D (OmniVision OV50D) f/2.2 அபெச்சர் உடன் அல்ட்ரா வைடு லென்ஸ், மேக்ரோ ஆப்ஷன், 64MP 1/2″ இன்ச் OmniVision OV64B பெரிஸ்கோப் டெலிபோட்டோ உடன் OIS ஆதரவு.

நுபியா Z70 அல்ட்ரா கேமரா விபரம் (nubia Z70 Ultra Camera Details):

இந்த ஸ்மார்ட்போன் சாதனம் அண்டர் டிஸ்பிளே முன்பக்க கேமராவை (under display front facing selfie camera) கொண்டுள்ளது. இந்த செல்பி கேமரா டிஸ்பிளேவின் கீழ் ஒளித்துவைக்கப்பட்டுள்ளது. இது 16MP OmniVision OV16A1Q அண்டர் டிஸ்பிளே கேமராவாக வருகிறது. இன்பிராரெட் சென்சார் (infrared sensor), பிங்கர்பிரிண்ட் சென்சார் (finger print sensor) போன்ற ஆதரவுடன், டூயல் ஸ்பீக்கர், DTS: X ULTRA அம்சத்தை ஆதரிக்கிறது.

இந்த நுபியா Z70 அல்ட்ரா (nubia Z70 Ultra) ஸ்மார்ட்போன் சாதனம் IP68 & IP69 ரேட்டிங் உடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சத்தை ஆதரிக்கிறது. இந்த போன் 5G NSA /SA, டூயல் 4G VoLTE, வைஃபை 7 (Wi-Fi 7 802.11 be 2.4GHz + 5GHz + 6GHz), ப்ளூடூத் (Bluetooth 5.4), ஜிபிஎஸ் (GPS) L1/L5+ GLONASS, USB Type-C, NFC, போன்ற அம்சங்களுடன் 6150mAh பேட்டரியை (battery) 80W பாஸ்ட் சார்ஜிங் (fast charging) உடன் பேக் செய்கிறது.

நுபியா Z70 அல்ட்ரா விலை (nubia Z70 Ultra Price):

- nubia Z70 Ultra 12GB+256GB விலை தோராயமாக ரூ. 61,460
- nubia Z70 Ultra 16GB+512GB விலை தோராயமாக ரூ. 69,885
- nubia Z70 Ultra 16GB+512GB விலை தோராயமாக ரூ. 71,570
- nubia Z70 Ultra 24GB+1TB விலை தோராயமாக ரூ. 80,000 இதன் விற்பனை டிசம்பர் 5, 2024 ஆம் தேதி முதல் துவங்குகிறது.

Best Mobiles in India

English summary
nubia Z70 Ultra With Under Display Camera In Black Yellow and Blue Starry Night Edition Price and Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X