Home
Mobile

யாரு சாமி அவன்.. SONY கேமரா.. BOE டிஸ்பிளே.. 5100mAh பேட்டரி.. AI பீச்சர்கள்.. எந்த மாடல்?

சோனி சென்சார் மெயின் கேமரா, ஹைனிக்ஸ் சென்சார் டெலிபோட்டோ கேமரா, கேலக்ஸி நைட் சீன் மோட், ஏஐ மேஜிக் எரைசர், ஏஐ ஸ்கை போன்ற பிரீமியம் கேமரா பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிஓஇ டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 5100mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்ற பீச்சர்களிலும் பின்னிப்பெடல் எடுக்கும்படி நுபியா இசட்60எஸ் ப்ரோ (Nubia Z60S Pro) போன் களமிறங்கி இருக்கிறது. இந்த நுபியா இசட்60எஸ் ப்ரோ போனின் பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.

நுபியா இசட்60எஸ் ப்ரோ அம்சங்கள் (Nubia Z60S Pro Specifications): இந்த போனில் 6.8 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) பிஓஇ ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.

யாரு சாமி அவன்.. SONY கேமரா.. BOE டிஸ்பிளே.. 5100mAh பேட்டரி மாடல்!

லாங்சி கிளாஸ் புரொடெக்சன் (Longxi Glass Protection) வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு மைஓஎஸ் 14 (MyOS 14) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 8 Gen 2 4nm) சிப்செட் வருகிறது. இந்த பிரீமியம் சிப்செட்டுக்கு ஏற்ப அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த நுபியா இசட்60எஸ் ப்ரோ போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வருகிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் வருகிறது. நியோவிஷன் ஏஐ போட்டோகிராபி சிஸ்டம் 2.0 வருகிறது.

சோனி ஐஎம்எக்ஸ்906 (Sony IMX906) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த மெயின் கேமராவில் ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் வருகிறது. ஓம்னிவிஷன் ஓவி50டி40 (OmniVision OV50D40) சென்சார் கொண்ட 50 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் வருகிறது. சூப்பர் மேக்ரோ சப்போர்ட் உள்ளது.

யாரு சாமி அவன்.. SONY கேமரா.. BOE டிஸ்பிளே.. 5100mAh பேட்டரி மாடல்!

ஹைனிக்ஸ் எச்ஐ847 (Hynix Hi847) சென்சார் கொண்ட 8 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. இந்த கேமராவிலும் ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் உள்ளது. ஓம்னிவிஷன் ஓவி16ஏகியூ (OmniVision OV16AQ) சென்சார் கொண்ட 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. மெயின் கேமராவில் ஏஐ மேஜிக் எரைசர் (AI Magic Eraser), ஏஐ ஸ்கை (AI Sky) பீச்சர்கள் வருகின்றன.

இதுபோக ஏஐ பிளர் (AI Blur) மற்றும் நைட்போட்டோகிராபிக்காக கேலக்ஸி நைட் சீன் மோட் (Galaxy Night Scene Mode) வருகிறது. இந்த நுபியா இசட்60எஸ் ப்ரோ போனி் 5100mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் டைப்-சி ஆடியோ சப்போர்ட் உள்ளது.

இந்த போனில் பிளாக், ஆக்வா மற்றும் ஒயிட் ஆகிய கலர்கள் வருகிறது. 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.34,505ஆகவும், 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.37,955ஆகவும், 16 ஜிபி + 512 ஜிபி மாடலின் விலை ரூ.42,560ஆகவும் இருக்கிறது. அதேபோல 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி மாடலின் விலை ரூ.49,460ஆக இருக்கிறது.

இப்போது, சீனாவில் ஆர்டருக்கு கிடைக்கிறது. குளோபல் மார்கெட்டில் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. குளோபல் வேரியண்ட்டின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.47,620ஆக இருக்கிறது. இதே விலையில் மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nubia Z60S Pro With 50MP Camera, 16GB RAM Sale From August 12 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X