Home
Mobile

டூயல் ரியர் கேமராவுடன் நுபியா இசெட்18 மினி அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

சீன நிறுவனமான நுபியா இந்த பல்வேறு அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, மேலும் இந்தியாவில் நுபியா ஸ்மார்ட்போன் மாடல்கள அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் நுபியா இசெட்18 மினி என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

டூயல் ரியர் கேமராவுடன் நுபியா இசெட்18 மினி அறிமுகம்.!

டயமண்ட் பிளாக், புளூ, ரோஸ், ஊதா போன்ற பல்வேறு நிறங்களில் இந்த நுபியா இசெட்18 மினி ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் எனத் தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சாதனத்தின் விலை மட்டும் தான் சற்று உயர்வாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு நுபியா இசெட்18 மினி ஸ்மார்ட்போனின் எடைப் பொறுத்தவரை 153 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுபியா இசெட்18 மினி ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல்
தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நுபியா இசெட்18 மினி ஸ்மார்ட்போனில் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்
ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த இசெட்18 மினி ஸ்மார்ட்போன்.

டூயல் ரியர் கேமராவுடன் நுபியா இசெட்18 மினி அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இசெட்18 மினி ஸ்மார்ட்போனில் 13எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வைபை 801.11, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How To Increase the Speed of your Laptop (TAMIL)

நுபியா இசெட்18 மினி ஸ்மார்ட்போனில் 3450எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஃபேஸ் அன்லாக் வசதியைக் கொண்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டூயல் ரியர் கேமராவுடன் நுபியா இசெட்18 மினி அறிமுகம்.!

நுபியா இசெட்18 மினி ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.21.760-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Nubia Z18 mini launched with 5 7 inch FHD display and 6GB RAM; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X