ஏப்ரல் 11: 24எம்பி கேமராவுடன் களமிறங்கும் நுபியா இசெட்18 மினி.!
குறிப்பாக நுபியா இசெட்18 மினி ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் அம்சம் இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நுபியா இசெட்18 மினி ஸ்மார்ட்போன் மாடல் ஏப்ரல் 11-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என நுபியா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, மேலும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நுபியா இசெட்18 மினி ஸ்மார்ட்போனில் 24மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் அசத்தலான செல்பீ கேமரா அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுபியா இசெட்18 மினி ஸ்மார்ட்போன் மாடல் 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகித அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

குறிப்பாக நுபியா இசெட்18 மினி ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் அம்சம் இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில்
வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நுபியா இசெட்18 மினி ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications