Home
Mobile

13எம்பி டூயல் ரியர் மற்றும் 16 எம்பி செல்பீ கேம் உடன் மிரட்டும் நுபியா இசெட்17எஸ்.!

வெளியான புகைப்படம் முழு சாதனத்தையும் வெளிப்படுத்தவில்லை என்கிற போதிலும் அதன் எட்ஜ் டூ எட்ஜ் டிஸ்பிளேவை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

By Muthuraj

இசெட்டிஇ நிறுவனம், வருகிற அக்டோபர் 12-ஆம் தேதி சீனாவில் நடைபெறவிருக்கும் ஒரு புதிய வெளியீட்டு நிகழ்வில் அதன் புதிய நுபியா இசெட்17எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலைப்பாட்டில் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய டீஸர் ஒன்றும் நுபியா இசெட்17எஸ் வெளியீட்டை உறுதிப்படுத்தியது.

13எம்பி டூயல் ரியர் & 16 எம்பி செல்பீ கேம் உடன் நுபியா இசெட்17எஸ்.!

பிளேஃபுல் ஆண்ட்ராய்டு மூலம் வெளியிடப்பட்ட அந்த டீஸரில் 'எஸ்' என்ற எழுத்து பிரதானமாகவும், ஓரத்தில் நுபியா லோகோ மற்றும் 12.10.17 என்ற வெளியீட்டு தேதியும் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டிருந்தது.

பெஸல்லெஸ் டிஸ்பிளே

பெஸல்லெஸ் டிஸ்பிளே

இதற்கிடையில், தற்போது நுபியா இசெட் 17எஸ் ஸ்மார்ட்போனின் நேரடி புகைப்படமொன்று, நேற்று ஆன்லைனில் கசிந்தது. அந்த லீக்ஸ் படத்தின் படி, சாதகத்தின் அனைத்து பக்கங்களிலும் பெஸல்லெஸ் டிஸ்பிளே காட்சிப்படுகிறது.

எட்ஜ் டூ எட்ஜ் டிஸ்பிளே

எட்ஜ் டூ எட்ஜ் டிஸ்பிளே

வெளியான புகைப்படம் முழு சாதனத்தையும் வெளிப்படுத்தவில்லை என்கிற போதிலும் அதன் எட்ஜ் டூ எட்ஜ் டிஸ்பிளேவை மற்றும் அதன் முழுமையான பெஸல்லெஸ் வடிவமைப்பை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

டிஇஎன்ஏஏ சான்றிதழ் வலைத்தளத்தில்

டிஇஎன்ஏஏ சான்றிதழ் வலைத்தளத்தில்

இதற்கு முன்னர், நுபியா இசெட்17எஸ் ஆனது நுபியா என்எக்ஸ்589ஜே என்ற பெயரின் கீழ் டிஇஎன்ஏஏ சான்றிதழ் வலைத்தளத்தில் காணப்பட்டது. அந்த பட்டியல் தொலைபேசியின் படங்கள் மற்றும் சாதனத்தின் முக்கிய குறிப்புகளை சுட்டிக்காட்டியது.

5.2 அங்குல எச்டி டிஸ்ப்ளே

5.2 அங்குல எச்டி டிஸ்ப்ளே

அந்த பட்டியலின் படி, நுபியா இசெட்17எஸ் ஆனது, 1920 x 1080 பிக்சல் தீர்மானம் கொண்ட 5.2 அங்குல எச்டி டிஸ்ப்ளே கொண்டுருக்கும் மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்புடன் இணைந்த 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் செயலி மூலம் இயக்கப்படும்.

13 மெகாபிக்சல் பின்புற கேமரா அமைப்பு

13 மெகாபிக்சல் பின்புற கேமரா அமைப்பு

கேமராத்துறையை பொறுத்தமட்டில், இரட்டை தொனியில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா மற்றும் இரட்டை 13 மெகாபிக்சல் பின்புற கேமரா அமைப்பு கொண்டிருக்கும். மேலும் இது காட்சிக்கு கீழே உள்ள முகப்பு பொத்தானுடன் உட்பொதிந்த ஒரு கைரேகை சென்சாரும் கொண்டிருக்கும்.

3100எம்ஏஎச் பேட்டரி

3100எம்ஏஎச் பேட்டரி

இரட்டை சிம் ஆதரவுடன் ஆண்ட்ராய்டு 7.1.1 அடிப்படையிலான நிறுவனத்தின் நுபியா யூஐ கொண்டு இயங்கும் இந்த சாதனம் 3100எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம்.

தங்கம் மற்றும் வெள்ளி

தங்கம் மற்றும் வெள்ளி

இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில், 4ஜி வோல்ட், ப்ளூடூத், வைஃபை, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் ஒரு யூஎஸ்பி டைப் சி ஆகியவைகளை கொண்டுள்ளது. பரிமாணங்களில் 147.99 x 72.09 x 7.95 மிமீ மற்றும் 156 கிராம் எடையும் கொண்டுள்ள இக்கருவி தங்கம் மற்றும் வெள்ளி வண்ண விருப்பங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nubia Z17s to launch on October 11, teaser confirms. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X