விரைவில் : 6ஜிபி ரேம் உடன் வெளிவரும் அட்டகாசமான நுபியா இசெட்17 மினி.!
நுபியா இசெட்17 மினி பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 6.0.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது.
நுபியா நிறுவனம் கூடிய விரைவில் நுபியா இசெட்17 மினி என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, மேலும் சீன வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய முழு தகவல்கள் வெளிவந்துள்ளது, அதன்பின் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.
இந்த நுபியா இசெட்17 மினி ஸ்மார்ட்போன் பொதுவாக அரோரா ப்ளூ வண்ண விருப்பம் கொண்டு வெளிவரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் இவற்றில் இடம்பெற்றுள்ள மிகப் பெரிய சிறப்பம்சம் என்னவென்றால் 6ஜிபி ரேம் உடன் வெளிவருகிறது இந்த ஸ்மார்ட்போன்.

5.2-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த
ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 6.0.1:
நுபியா இசெட்17 மினி பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 6.0.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2730எம்ஏஎச்:
நுபியா இசெட்17 மினி பொறுத்தவரை 2950எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது. அதன்பின்இக்கருவியன் விலைப் பொறுத்தவரை ரூ.19,999-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications