8 ஜிபி ரேம், 128ஜிபி மெமரி உடன் வெளிவரும் நுபியா இசெட்17.!
நுபியா இசெட்17 : பின்புற கேமரா 23மெகா பிக்சல் கொண்டவை.!
நுபியா இசெட்17 பொருத்தவரை இரட்டை கேமரா அமைப்பு கொண்டது, கருப்பு, தங்கம்,சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களில் இந்த மொபைல் தற்போது வெளிவருகிறது, மேலும் இவற்றுள் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பம் இதனுடன் அடக்கம். இவை மொபைல் சந்தையில் மிகப்பெரிய வரவேற்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவை. இதன் திரைபொருத்தமாட்டில் மிக அழகாக இருக்கும் தன்மை கொண்டவை. மேலும் இதனுடன் கொரில்லா கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. நுபியா இசெட்17பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. 2.4ஜிஎச்இசெட் ஆக்டோகோர், ஸ்னாப்ட்ராகன் 835 மூலம் இவை இயக்கப்படுகிறது.
இந்தக்கருவி 8 ஜிபி ரேம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 128ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, இதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
நுபியா இசெட்17 பொருத்தவரை பின்புற கேமரா 23மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற கேமரா 12 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை. வைஃபை, ப்ளுடூத் 4.2 , ஜிபிஎஸ்,யுஎஸ்பி, வோல்ட் போன்ற இணைப்பு ஆதரவுகள் இதில் இடம்பெற்றுள்ளன.
இதன் பேட்டரி பொருத்தவரை 3200எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். இன்டர்நெட் பயன்பாட்டிற்க்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications