6-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் நூபியா வி18.!

By Prakash S

    இந்தியாவில் சீன ஸ்மார்ட்போன்களின் மோகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக சீன ஸ்மார்ட்போன்களின் விலைப் பொறுத்தவரை குறைவாக இருப்பதால் மக்கள் இதனை அதிகம் விரும்புகின்றனர். தற்சமயம் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான நூபியா நிறுவனத்தின் 'வி18" சாதனத்தின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

    6-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் நூபியா வி18.!

    மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டீசர் ஆன்லைனில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நூபியா வி18 சாதனம் பொதுவாக 6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது 'வி18" ஸ்மார்ட்போன் மாடல்.

    6-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் நூபியா வி18.!

    இப்போது வரும் சில ஸ்மார்ட்போன் மாடல்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி அதிகமாக இடம்பெறுகிறது, இந்த நூபியா வி18 ஸ்மார்ட்போனிலும் இதே தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கைரேகை சென்சார் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது இந்த நூபியா வி18 ஸ்மார்ட்போன்.

    வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம், போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

    6-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் நூபியா வி18.!

    நூபியா வி18 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மாதம் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)

    நூபியா வி18 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

    English summary
    Nubia V18 with 6-inch 18:9 display to launch soon ; Read more about this in Tamil GizBot
    X

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more