18 ஜிபி ரேம் / 512 ஜிபி ஸ்டோரேஜ் உடன் Nubia Red Magic 6 மற்றும் Nubia Red Magic 6 Pro அறிமுகம்.. விலை இதானா?

|

இந்தியாவில் அதிகம் அறியப்படாத பெயர் நுபியா, அப்படியான நுபியா நிறுவனம் அதன் சொந்த நாடான சீனாவில் கேமிங் ஸ்மார்ட்போன்களுக்கான மதிப்புக்கு மிகப் பெரிய பெயரைப் பெற்றுள்ளது என்பதே உண்மை. நுபியா நிறுவனம் இன்று சீனாவில் நுபியா ரெட் மேஜிக் 6 மற்றும் ரெட் மேஜிக் 6 ப்ரோ என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

நுபியா ரெட் மேஜிக் 6 மற்றும் ரெட் மேஜிக் 6 ப்ரோ

நுபியா ரெட் மேஜிக் 6 மற்றும் ரெட் மேஜிக் 6 ப்ரோ

நுபியா நிறுவனம் இன்று அறிமுகம் செய்த நுபியா ரெட் மேஜிக் 6 மற்றும் ரெட் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் 8ஜிபி ரேம் முதல் துவங்கி 18ஜிபி ரேம் வரை கொண்ட வெவ்வேறு வேரியண்ட் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நுபியா ரெட் மேஜிக் 6 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி கொண்ட ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் இந்திய மதிப்பின் படி தோராயமாக ரூ. 42,700 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

12 ஜிபி ரேம் மாடலின் விலை

12 ஜிபி ரேம் மாடலின் விலை

அதேபோல், இதன் 12 ஜிபி மற்றும் 128 ஜிபி கொண்ட வேரியண்ட் மாடலின் விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ. 46,100 ஆகும். இதன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி கொண்ட வேரியண்டிற்கு தோராயமாக ரூ .49,520 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது நுபியா ரெட் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் மாடலின் விலையைப் பார்க்கலாம், இதன் விலை தோராயமாக ரூ. 49,520-ஐ நெருங்குகிறது.

1TB ஸ்டோரேஜ் உடன் தயாராகிறதா iPhone 13 சாதனம்? என்னப்பா சொல்றீங்க உண்மையாவா?1TB ஸ்டோரேஜ் உடன் தயாராகிறதா iPhone 13 சாதனம்? என்னப்பா சொல்றீங்க உண்மையாவா?

256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை

256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை

அதேபோல், இதன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மாடலின் விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ. 54,000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை தோராயமாக ரூ. 59,600 என்ற விலையை நெருங்குகிறது.

16 ஜிபி ரேம் மாடலின் விலை

16 ஜிபி ரேம் மாடலின் விலை

இதுமட்டுமின்றி, நுபியா ரெட் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் கூடிய ட்ரான்ஸ்பரென்ட் எடிஷன் மாடலின் விலை தோராயமாக ரூ. 63,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் நிறுவனம் தனது பட்டியலை நிறுத்திவிட்டது என்று மட்டும் நினைக்காதீர்கள், இனி தான் அட்டகாசமான தகவலே காத்திருக்கிறது.

18 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை

18 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை

நுபியா நிறுவனம் ரெட் மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் நீங்கள் நினைத்துப் பார்த்திடாத வகையில் 18 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் கூடிய அட்டகாசமான பவர்ஃபுல் ஸ்மார்ட்போன் மாடலை தோராயமாக ரூ. 74,244 என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது.

Best Mobiles in India

English summary
Nubia unveils Red Magic 6 series phones with up to 18GB of RAM : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X