10 ஜிபி ரேமுடன் களமிறங்கிய நுபியா ரெட் மேஜிக் மார்ஸ் கேமிங் போன்.!
இஜட்.டி.இ இன் நுபியா நிறுவனம், அதன் சமீபத்திய கேமிங் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இஜட்.டி.இ இன் நுபியா நிறுவனம், அதன் சமீபத்திய கேமிங் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
நுபியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள தனது புதிய கேமிங் ஸ்மார்ட்போனிற்கு "நுபியா ரெட் மேஜிக் மார்ஸ்" என்று பெயரிட்டுள்ளது.

நுபியா ரெட் மேஜிக் மார்ஸ்
நுபியா நிறுவனத்தின் நுபியா ரெட் மேஜிக் மார்ஸ் கேமிங் ஸ்மார்ட்போன் மூன்று வேரியண்ட்களில், மூன்று நிறத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் இன் விற்பனை வரும் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் துவங்குமென்று நுபியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 7
டிசம்பர் 7 ஆம் தேதி முதல் நுபியா ரெட் மேஜிக் மார்ஸ் கேமிங் ஸ்மார்ட்போன் ஜிங்டோங் வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படுமென்று நுபியா நிறுவனம் அறிவித்துள்ளது. நுபியா ரெட் மேஜிக் மார்ஸ் ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம், 8ஜிபி ரேம் மற்றும் 10 ஜிபி ரேம் கொண்ட மூன்று சேமிப்பு வேரியண்ட்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நுபியா ரெட் மேஜிக் மார்ஸ் விலை
நுபியா ரெட் மேஜிக் மார்ஸ், 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி வேரியண்ட் இந்திய சந்தையில் சுமார் ரூ.27,430 என்ற விலையில்விற்பனை செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் இந்திய சந்தையில் சுமார் ரூ.32,470 என்ற விலையில் விற்பனை செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. நுபியா ரெட் மேஜிக் மார்ஸ் இன் 10 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட வேரியண்ட் சுமார் ரூ.40,599 என்ற விலையில் விற்பனை செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

காமோஃபிளேஜ் எடிஷன்
நுபியா ரெட் மேஜிக் மார்ஸ் பிளாக், ஃபிளேம் ரெட் மற்றும் காமோஃபிளேஜ் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காமோஃபிளேஜ் எடிஷன் நுபியா ரெட் மேஜிக் மார்ஸ் ஸ்மார்ட்போன் சிறப்பு பிங்கர்-பிரிண்ட் ரெஸிஸ்டண்ட் கோட்டிங்குடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நுபியா ரெட் மேஜிக் மார்ஸ் விபரக்குறிப்பு:
- 6' இன்ச் முழு எச்.டி டிஸ்பிளே
- 2.8 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
- 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 10 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 16 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க கேமரா
- 8 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா
- ரெட் மேஜிக் ஓ.எஸ் 1.6
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- வைஃபை
- ப்ளூடூத்
- வோல்ட்-இ
- யு.எஸ்.பி. டைப்-சி
- 3800 எம்.ஏ.எச் பேட்டரி


Click it and Unblock the Notifications