இந்தியா: 24எம்பி ரியர் கேமராவுடன் நுபியா ரெட் மேஜிக் கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.

|

நீண்டநாட்களுக்கு பிறகு நுபியா நிறுவனம் ரெட் மேஜிக் கேமிங் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் டிசம்பர் 20-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா: நுபியா ரெட் மேஜிக் கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

குறிப்பாக நுபியா ரெட் மேஜிக் கேமிங் ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம், பின்பு இந்த சாதனத்தில் கேமிங் பூஸ்ட் அம்சம் இடம்பெற்றுள்ளது, மேலும் இவற்றுள் கிராஃபைட் அடுக்குகள் இருப்பதால்
வெப்ப காற்று விகிதத்தை அதிகரிக்காமல் குளிர்ச்சி அடையச் செய்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

நுபியா ரெட் மேஜிக் கேமிங் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2160 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி ரேம்:

8ஜிபி ரேம்:

நுபியா ரெட் மேஜிக் கேமிங் ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் அனைத்து கேம் செயலிகளையும் பயன்படுத்த முடியும்.

சிப்செட்:

சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1
ஒரியோ இயங்குதளம் இவற்றுள் அடக்கம். டிடிஎஸ் தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட் ஆம்பிலிஃபியர் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் அதிவேக ஆடியோ அனுபவம் கொடுக்கிறது.

கேமரா:

கேமரா:

நுபியா ரெட் மேஜிக் கேமிங் ஸ்மார்ட்போனில் 24எம்பி ரிய் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடமபெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

நுபியா ரெட் மேஜிக் கேமிங் ஸ்மார்ட்போன் 3800எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு ப்ளூடூத் 5.0 மற்றும் எம்ஐஎம்ஒ தொழில்நுட்பம், வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக ரூ.29,999-விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Nubia Red Magic Gaming smartphone announced in India, priced at Rs 29,999: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X