உலகின் முதல் SD8G3 சாதனம்.. பவரோ பவர் டிவைஸ்.. AI அம்சத்துடன் Nubia கேமிங் Mobile..என்ன மாடல்?
நுபியா (Nubia) நிறுவனம் விரைவில் அதன் கேமிங் ஸ்மார்ட்போன் (Gaming Smartphone) மாடல் சீரிஸ் ஆன, ரெட் மேஜிக் (Red Magic) சீரிஸ் வரிசையில் புதிய சேர்ப்பை சேர்க்கவுளள்து. கெத்தா, மாஸ்ஸா ஒரு புது ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்ய தயாராகிவிட்டது நுபியா நிறுவனம். அட்டகாசமான அம்சங்களுடன் ஏஐ (AI) அம்சத்தை இணைத்து, மிக விரைவில் நுபியா நிறுவனம் நுபியா ரெட் மேஜிக் 9S ப்ரோ சீரிஸ் (Nubia Red Magic 9S Pro Series) போன்களை அறிமுகம் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த நவம்பர், 2023 இல் நுபியா நிறுவனம் அதன் நுபியா ரெட் மேஜிக் 9 ப்ரோ (Nubia Red Magic 9 Pro) மற்றும் நுபியா ரெட் மேஜிக் 9 ப்ரோ பிளஸ் (Nubia Red Magic 9 Pro+) என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நிறுவனம் மற்றொரு புதிய போனை அறிமுகம் செய்யவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

நுபியா ரெட் மேஜிக் 9S ப்ரோ சீரிஸ் (Nubia Red Magic 9S Pro Series):
இது புதிய நுபியா ரெட் மேஜிக் 9S ப்ரோ சீரிஸ் (Nubia Red Magic 9S Pro Series) என்ற பெயருடன் புதிய கேமிங் போன் ஆக வரும் ஜூலை 3, 2024 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று நுபியா அறிவித்துள்ளது. இது வழக்கமான ஒரு கேமிங் ஸ்மார்ட்போனாக இல்லாமல், ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் அம்சம் கொண்ட ஒரு ஏஐ கேமிங் ஸ்மார்ட்போன் சாதனமாக புதிய சாதனம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
நுபியா ரெட் மேஜிக் 9S ப்ரோ சீரிஸ் (Nubia Red Magic 9S Pro Series) பற்றிய தகவல்களை நிறுவனம் இன்னும் மர்மமாக வைத்துள்ளது. இருப்பினும், இது என்ன சிப்செட்டை பெரும் என்ற தகவல் தற்போது லீக் ஆகியுள்ளது. ஸ்னாப்டிராகன் சிப்செட் வரிசையில், சமீபத்திய புதிய சக்தி வாய்ந்த சிப்செட் சாதனமாக கருதப்படும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட்டை இது பெரும் என்று கூறப்படுகிறது.
இது, இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்னாப்டிராகன் 8 ஜென் சிப்செட்டின் மேம்படுத்தப்பட்ட சிப்செட் மாடலாகும். நினைவுகூர, குவால்காம் கடந்த ஆண்டு அக்டோபரில் Snapdragon 8 Gen 3 சிப்பை வெளியிட்டது. இது 3.36GHz அதிகபட்ச செயலாக்க வேகத்தை கொண்டிருந்தது. ஜனவரி 2023 இல், சாம்சங் கேலக்ஸிக்கான ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப் பொருத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் வெளியிடப்பட்டது.
உலகின் முதல் SD8G3 சாதனம்.. AI அம்சத்துடன் சக்தி வாய்ந்த கேமிங் ஸ்மார்ட்போன்:
கூறப்பட்ட சிப்செட் SD8G3 இன் ஓவர்லாக் செய்யப்பட்ட பதிப்பாக வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது 3.39GHz இல் வேலை செய்கிறது. ரெட் மேஜிக் 9எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் சாதனமும் இந்த வேகத்தில் இயக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 லீடிங் பதிப்பு, அதே 3.39GHz கடிகார வேகத்தை வழங்கும்.
கடந்த ஆண்டு ரெட் மேஜிக் 8எஸ் ப்ரோவை இயக்கிய ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 லீடிங் வெர்ஷன் போன்ற சிறந்த ஜிபியு செயல்திறனை விட மேம்படுத்தப்பட்ட வேகத்தை வழங்கும் என்று லீக் டஹ்கவல்கள் கூறியுள்ளது. மீண்டும் சொல்ல வேண்டுமானால், Red Magic 9S Pro ஆனது, ஓவர்லாக் செய்யப்பட்ட Snapdragon 8 Gen 3 சிப்பைக் கொண்டிருக்கும் முதல் சாம்சங் அல்லாத தொலைபேசியாக உலகில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications