Home
Mobile

எல்லாமே உச்சம்: 16ஜிபி ரேம், 512ஜிபி உள்சேமிப்புடன் ரெட் மேஜிக் 6எஸ் ப்ரோ- விலை தெரியுமா?

நுபியா ரெட் மேஜிக் 6 எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி உடன் இயக்கப்படுகிறது. 16 ஜிபி வரையிலான எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. நுபியா ரெட் மேஜிக் 6 எஸ் ப்ரோ சாதனம் ஆனது சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனானது 165 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. நுபியா உலகளவில் ரெட் மேஜிக் 6 எஸ் ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 165 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

நுபியா ரெட் மேஜிக் 6 எஸ் ப்ரோ

நுபியா ரெட் மேஜிக் 6 எஸ் ப்ரோ

நுபியா ரெட் மேஜிக் 6 எஸ் ப்ரோ சாதனத்தின் விலை 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.43,800 ஆக இருக்கிறது. 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.51,000 ஆக இருக்கிறது. கோஸ்ட் எனப்படும் வேரியண்ட் 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.53,300 ஆக இருக்கிறது.

ரெட் மேஜிக் 6 எஸ் ப்ரோ சிறப்பம்சங்கள்

ரெட் மேஜிக் 6 எஸ் ப்ரோ சிறப்பம்சங்கள்

ரெட் மேஜிக் 6 எஸ் ப்ரோ கேமிங் போனாக இருக்கிறது. இது 6.8 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த சாதனம் 165 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கிறது. அதேபோல் 720 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விருப்பத்தை கொண்டுள்ளது. 700 நிட்ஸ் உச்ச பிரகாச நிலை வரம்பை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என டிஸ்ப்ளே கீழ் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இருக்கிறது. அதேபோல் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பும் உள்ளது.

ஸ்னாப்டிராகன் 888 ப்ளஸ் செயலி

ஸ்னாப்டிராகன் 888 ப்ளஸ் செயலி

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 888 ப்ளஸ் செயலி மற்றும் அட்ரினோ 660 ஜிபியூ உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ரேம் என இரண்டு ரேம் வகைகளிலும் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு என்ற மூன்று சேமிப்பு விருப்பங்களிலும் கிடைக்கிறது. 165 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் சிப்செட் வசதியோடு ரெட் மேஜிக் 6 எஸ் ப்ரோ சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

450 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதம்

450 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதம்

நுபியா ரெட் மேஜிக் 6 எஸ் ப்ரோ சாதனத்தில் எம் கீ என்று அழைக்கக்கூடிய மேட்ச் அம்சத்தோடு டச் பேட் பகுதியை கொண்டிருக்கிறது. இது இரண்டு செயல்களை தனிப்பயனாக்க அனுமதிக்கிறது. 450 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்துடன் வருகிறது. நுபியா ரெட் மேஜிக் 6எஸ் ப்ரோ சாதனத்தில் மூன்று கேமரா அமைப்பு இருக்கிறது.

64 மெகாபிக்சல் முதன்மை கேமரா

64 மெகாபிக்சல் முதன்மை கேமரா

நுபியா ரெட் மேஜிக் 6எஸ் ப்ரோ சாதனத்தில் மூன்று கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா உடன் வருகிறது. அதேபோல் இதில் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் உள்ளன. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. செல்பி கேமரா ஆனது பஞ்ச் ஹோல் வடிவமைப்போடு உள்ளது.

ஆண்ட்ராய்டு 11  ஆதரவு

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு

நுபியா ரெட் மேஜிக் 6எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான மேஜிகோஸ் 4.5 உடன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5050 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இதில் 5ஜி , ப்ளூடூத், யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகளோடு வருகிறது.

Best Mobiles in India

English summary
Nubia Red Magic 6S Pro Smartphone Launched with 16GB RAM, 512GB Storage and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X