Home
Mobile

நுபியா ரெட் மேஜிக் 5எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்னென்ன சிறப்பம்சங்கள்.!

நுபியா நிறுவனம் தனது நுபியா ரெட் மேஜிக் 5எஸ் ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, கூடிய விரைவில் இந்த சாதனம் உலகம் முழுவதும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்கள்
மற்றும் விலை உள்ளிட்ட தகவல்களை பார்ப்போம்.

ரெட் மேஜிக் 5எஸ் ஸ்மார்ட்போன் ஆ

நுபியா ரெட் மேஜிக் 5எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.65-இன்ச் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 × 2340 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் மற்றம் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது.

நுபியா ரெட் மேஜிக் 5எஸ்

நுபியா ரெட் மேஜிக் 5எஸ் ஸ்மார்ட்போனில் 2.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உடன் அட்ரினோ650ஜிபியு ஆதரவும் உளளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி/16ஜிபி ரேம்

இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி/16ஜிபி ரேம் வசதி மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மேஜிக் 5எஸ் ஸ்மார்ட்போனின்

நுபியா ரெட் மேஜிக் 5எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் சோனி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 மேஜிக் 5எஸ் ஸ்மார்ட்போனில்

நுபியா ரெட் மேஜிக் 5எஸ் ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 55வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

4ஜி வோல்ட்இ, வைஃ

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.40,630-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Nubia Red Magic 5S Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X