இன்று அறிமுகமாகும் நுபியா ரெட் மேஜிக் 5எஸ்- அட்டகாச அம்சங்கள்!

|

ஸ்னாப்டிராகன் 865 ப்ளஸ் எஸ்ஓசி, 320ஹெர்ட்ஸ் டச் விகிதத்துடன் நுபியா ரெட் மேஜிக் 5 எஸ் இன்று அறிமுகமாக உள்ளது.

நுபியா ரெட் மேஜிக் 5 எஸ்

நுபியா ரெட் மேஜிக் 5 எஸ்

சீன மைக்ரோ பிளாக்கிங் வலைதளமான வெய்போவின் அறிவிப்புப்படி, நுபியா ரெட் மேஜிக் 5 எஸ் ஜூலை 28 (இன்று) அறிமுகமாக உள்ளது. முன்னதாக ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் குறித்து வெளியான தகவலை பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது 865 ப்ளஸ் எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் அட்டகாச டச் விகிதத்தை கொண்டுள்ளது. கூடுதலாக 144Hz புதுப்பிப்பு வீதக் காட்சியைக் கொண்டுள்ளது.

நுபியா ரெட் மேஜிக் 5 எஸ் வெளியீடு

நுபியா ரெட் மேஜிக் 5 எஸ் வெளியீடு

நுபியா ரெட் மேஜிக் 5 எஸ் ஜூலை 28 ஆம் தேதி இன்று சீனாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

நுபியா ரெட் மேஜிக் 5 எஸ் விவரக்குறிப்புகள்

நுபியா ரெட் மேஜிக் 5 எஸ் விவரக்குறிப்புகள்

நுபியா ரெட் மேஜிக் 5 எஸ் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகித்துடன், 320 ஹெர்ட்ஸ் டச் விகிதத்துடனும் இரண்டு மேற்புற பட்டன்களையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

865 ப்ளஸ் எஸ்ஓசி ஸ்னாப்டிராகன்

865 ப்ளஸ் எஸ்ஓசி ஸ்னாப்டிராகன்

மேலும் இந்த நுபியா ரெட் மேஜிக் 5 எஸ் ஸ்மார்ட்போனில் 865 ப்ளஸ் எஸ்ஓசி ஸ்னாப்டிராகன் இருக்கும் எனவும் குளிரூட்டம் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இதில் 15000 ஆர்பிஎம் உயர் செயல்திறன் பேன் உள்ளது இதன்மூலம் வெப்பத்தை வெளியேற்றக்கூடம். நீண்ட நேரம் கேம் விளையாடும்போது ஸ்மார்ட்போனை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்.

ரெட் மேஜிக் 5 எஸ் எல்பிடிடிஆர்

ரெட் மேஜிக் 5 எஸ் எல்பிடிடிஆர்

கூடுதலாக, ரெட் மேஜிக் 5 எஸ் எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 3.1 சேமிப்பகத்துடன் வரும் என்றும் வெயிபோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் வழங்கப்படும் அனைத்து உயர்நிலை அம்சங்களும் விலையை அதிகரிக்கவே வழிவகுக்கும் என தெரிகிறது. எனவே நுபியா ரெட்மேஜிக் 5 எஸ் காஸ்ட்லி போன்களின் வரிசையில் இடம்பெறும்.

ஏர்டெல் வாடிக்கையாளர்களே: இலவச 1 ஜிபி டேட்டா வேண்டுமா- இத பண்ணுங்க!ஏர்டெல் வாடிக்கையாளர்களே: இலவச 1 ஜிபி டேட்டா வேண்டுமா- இத பண்ணுங்க!

6.65-இன்ச் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே

6.65-இன்ச் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே

நுபியா ரெட் மேஜிக் 5ஜி சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் நுபியா ரெட் மேஜிக் 5ஜி லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.65-இன்ச் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 × 2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டிருந்தது.

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 765ஜி

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 765ஜி

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 2.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 765ஜி 7என்எம் பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 620ஜிபியு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி

இந்த நுபியா ரெட் மேஜிக் 5ஜி லைட் ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடலாக இது உள்ளது.

Best Mobiles in India

English summary
Nubia Red Magic 5S Going to Launch Today here specification features and more

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X