இந்தியா: விற்பனைக்கு வந்தது நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன்.!
சில நாட்களுக்கு முன்பு நுபியா நிறுவனம் ரெட் மேஜிக் 3எஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் வலைத்தளம் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நுபியா ரெட் மேஜிக் 3எஸ் விலை
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.35,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் ரூ.47,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

6.65-இன்ச் டிஸ்பிளே
நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.65-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080×2340 பிக்சல் திர்மானம் மற்றும் 19 :5 திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட்
இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு அட்ரினோ 640ஜிபியு வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

கேமரா அமைப்பு
நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் சேமிப்பு பொறுத்தவரை 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது.
நுபியா ரெட் மேஜிக் 3எஸ் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி 48எம்பி ரியர் கேமரா மற்றும் 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி
இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளதுஇபின்பு குவிக் சார்ஜ் 4.0, வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி,போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.


Click it and Unblock the Notifications