Home
Mobile

கேமர்களுக்கான வரப்பிரசாதம் நுபியா ரெட் மேஜிக் 3! அப்படி என்ன இருக்கு என்று தெரியுமா இந்த போனில்?

கேமிங் போன்களுக்கான வியாபாரம் இந்தியச் சந்தையில் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இடையில் பிளாக்ஷிப் கேமிங் போன்களுக்கான பயனர்கள் இந்தியச் சந்தையில் வெகுவாக அதிகரித்து வருகின்றனர்.

கேமர்களுக்கான வரப்பிரசாதம் நுபியா ரெட் மேஜிக் 3! அப்படி என்ன இருக்கு?

இந்தியச் சந்தையில் களமிறங்கி கேமிங் பயனர்களின் அனுபவத்தை அட்டகாசம் ஆக்கியுள்ள கேமிங் போன் பட்டியலில் புதிதாகக் களமிறங்கியுள்ள கேமிங் ஸ்மார்ட்போன் தான் நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன்.

2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன்

2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன்

கடந்த ஏப்ரல் மாதம், நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜூன் 17 ஆம் தேதி முதல் தனது விற்பனையை நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் துவங்கியுள்ளது.

அட்டகாசமான பல புதிய அம்சங்களுடன் களமிறங்கியுள்ள இந்த நுபியா ரெட் மேஜிக் 3 கேமிங் ஸ்மார்ட்போன், இந்த 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த கேமிங் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

லீக்குய்ட் கூலிங் & ஏர் கூலிங் மெக்கானிசம்

லீக்குய்ட் கூலிங் & ஏர் கூலிங் மெக்கானிசம்

கேமிங் ஸ்மார்ட்போன்களுக்கு தேவையான முதல் அத்தியாவசிய தொழில்நுட்பம் கூலிங் சிஸ்டங்கள் தான். கேமர்களின் தேவையை அறிந்து நுபியா நிறுவனம் உலகின் முதல் லீக்குய்ட் கூலிங் மற்றும் ஏர் கூலிங் மெக்கானிஸம் கொண்ட இரண்டு தொழில்நுட்பங்களையும் ஒன்றாக இனைத்து நுபியா ரெட் மேஜிக் 3 கேமிங் ஸ்மார்ட்போனில் வழங்கியுள்ளது. டர்போ பேன்களைப் பயன்படுத்தி போனில் உருவாகும் ஹீட்டை கட்டுப்படுத்தி பயனர்களுக்கு அருமையான கேமிங் அனுபவத்தை நுபியா ரெட் மேஜிக் 3 வழங்குகிறது.

கேமர்களை கவரும் பிரத்தியேக டிசைன்

கேமர்களை கவரும் பிரத்தியேக டிசைன்

கேமர்களை கவரும் மிரட்டலான பிரத்தியேக டிசைனுடன் நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேமர்களுக்கான மூன்று கேமர் மோடுகள், உறுதியான அலுமினியம் கோட்டிங்கில் மேட் பிரீமியம் டிசைன், ஹெக்ஸோகான் கேமரா மற்றும் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், ஸ்பீக்கர் கிரில் மற்றும் கண்களைக் கவரும் 16.8 மில்லியன் கலர் கஸ்டமைசேஷன் கொண்ட ஆர்.ஜி.பி கலர் ஸ்ட்ரிப்ஸ் எனப் பல அம்சங்களை ஒன்றாய் சேர்த்து நுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மாஸான கேமிங் அனுபவத்திற்கு 90Hz டிஸ்பிளே

மாஸான கேமிங் அனுபவத்திற்கு 90Hz டிஸ்பிளே

நுபியா ரெட் மேஜிக் 3 கேமிங் ஸ்மார்ட்போன், 6.7' இன்ச் முழு எப்எச்டி பிளஸ் எச்.டி.ஆர் அமோலேட் உடன் கூடிய 2160 x 1080 பிக்சல் கொண்ட 2.5டி கர்வுடு கிளாஸ் கொண்ட வளைந்த டிஸ்பிளேயுடன் மாஸாக களமிறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் மற்றும் அசுஸ் ரோக் போன் மாடல்களுக்கு அடுத்தபடியாக நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனில் 90Hz டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கேமர்களின் அனுபவத்தை அதிகரிக்க இந்த 90Hz டிஸ்பிளே முழு எச்.டி.ஆர் டிஸ்பிளே பயன்படுத்தப்பட்டுள்ளது.

4D வைப்ரேஷன், டூயல் ஸ்பீக்கர் & ட்ரிக்கர் பட்டன்

4D வைப்ரேஷன், டூயல் ஸ்பீக்கர் & ட்ரிக்கர் பட்டன்

பப்ஜி மற்றும் கால் ஆப் டூட்டி போன்ற கேம்களை விளையாடும் பொது கேமின் உணர்வை அப்படியே கேமர்கள் உணர்வதற்காக 4D வைப்ரேஷன் ஹெப்டிக் வைப்ரேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கேமிங் பயன்பாட்டை அற்புதமாக்க DTS:X மற்றும் 3D சவுண்ட் வழங்கு டூயல் ஸ்பீக்கர்களும் நுபியா ரெட் மேஜிக் 3 கேமிங் ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. கேமிங் கன்சோலில் விளையாடுவது போன்ற அனுபவத்தை வழங்க ட்ரிக்கர் பட்டன்களும் இந்த கேமிங் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது.

தடையில்லா கேமிங்கிற்காக 5000 எம்ஏஎச் பேட்டரி

தடையில்லா கேமிங்கிற்காக 5000 எம்ஏஎச் பேட்டரி

நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அத்துடன் இதில் 27W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளதால், மிக விரைவில் உங்கள் போனை சார்ஜ் செய்து மீண்டும் விரைவாக கேமிங் செய்யலாம். ப்ளூடூத் 5.0 மற்றும் எம்ஐஎம்ஒ தொழில்நுட்பம், வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் வழங்கப்பட்டுள்ளது.

டாப் டக்கர் கேமிங் சிறப்பம்சம்

டாப் டக்கர் கேமிங் சிறப்பம்சம்

நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன், அதிநவீன அட்ரினோ 640 ஜிபியூ உடன் கூடிய ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி/128ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி/253ஜிபி கொண்ட இரண்டு வேரியண்ட் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் எஸ்.டி கார்டு மூலம் கூடுதல் மெமரி நீட்டிப்பு ஆதரவும் இவற்றுள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமர்களுக்கான பிரத்தியேக இயங்குதளம்

கேமர்களுக்கான பிரத்தியேக இயங்குதளம்

இந்த மிரட்டலான நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்துடன் வந்துள்ளது. அதிலும் குறிப்பாக கேமர்களின் கேமிங்க அனுபவத்தைச் சிறப்பிக்கப் பிரத்தியேக கேமிங் சாப்ட்வேர் இதில் வழங்கப்பட்டுள்ளது. உங்கள் ஸ்மார்ட்போனை கேமிங் கன்சோலாக மாற்றம் செய்யச் சிறப்பு சுவிட்ச் பட்டனும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களின் கேமிங் அனுபவம் சிறப்படைவதுடன், கேம் விளையாடும் பொழுது எந்த தொல்லையும் இல்லாமல் விளையாட நோட்டிபிகேஷன்கள் நிறுத்தப்படுகிறது.

8K வீடியோ ரெகார்டிங் கேமரா

8K வீடியோ ரெகார்டிங் கேமரா

இந்த நுபியா ரெட் மேஜிக் 3 கேமிங் ஸ்மார்ட்போனில், 48 மெகா பிக்சல் கொண்ட ரியர் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த 48 மெகா பிக்ஸ்ல கேமரா 8K வீடியோ ரெகார்டிங் சேவையுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் 16 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபீ கேமராவும் இந்த கேமிங் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது. மிரட்டலான கேமிங் ஸ்மார்ட்போனில் 8K வீடியோ ரெகார்டிங் சேவையை வழங்கி கேமர்களுக்கு கூடுதல் பிரமிப்பை இந்த நுபியா ரெட் மேஜிக் 3 ஏற்படுத்தியுள்ளது.

கேமிங் ஸ்மார்ட்போன் பட்டியலில் நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் உண்மையில், கேமர்களுக்கான ஒரு தலை சிறந்த வரப்பிரசாதம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

Best Mobiles in India

English summary
Gamers God Mode Is On With New Nubia Red Magic 3 Gaming Phone In India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X