நுபியா ரெட் மேஜிக் 3:பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம்.! இதில் உள்ள சிறப்ப தெரிஞ்சுக்கோங்க!
இந்திய சந்தையில் கடந்த சில மாதத்தில் மட்டும் அதிகப்படியான பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒன்பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், ஹானர் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், பிளாக் ஷார்க் 2 போன்ற ஸ்மார்ட்போன்கள் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

சூப்பர் கேமிங் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்
அந்தவரிசையில் அடுத்த சூப்பர் கேமிங் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலாக நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் மாடலை இன்று 6.30 மணி அளவில் இந்தியச் சந்தியில் நுபியா நிறுவனம் அறிமுகம் செய்கிறது. இன்று நடைபெறும் இந்நிகழ்ச்சியில் நுபியா ஆல்பா வியரபில்ஸ்களும் அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே
நுபியா ரெட் மேஜிக் 3 கேமிங் ஸ்மார்ட்போன், 6.7' இன்ச் முழு எப்எச்டி பிளஸ் ஒஎல்இடி உடன் கூடிய 2160 x 1080 பிக்சல் கொண்ட 2.5டி கர்வ் கிளாஸ் கொண்ட வளைந்த டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸ் மற்றும் அசுஸ் ரோக் போன் மாடல்களுக்கு அடுத்தபடியாக நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனில் 90HZS டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அத்துடன் இந்த நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், டிடிஎஸ் ஸ்டீரியோ தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட் ஆம்பிலிஃபியர் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

12ஜிபி ரேம்
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128/ 253ஜிபி உள்ளடக்க வேரியண்ட் மாடல்களில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் எஸ்.டி கார்டு மூலம் கூடுதல் மெமரி நீட்டிப்பு ஆதரவும் இவற்றுள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

8K ரெகார்டிங் கேமரா
இந்த ஸ்மார்ட்போனில், 48 மெகா பிக்சல் கொண்ட ரியர் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த 48 மெகா பிக்ஸ்ல கேமரா 8K வீடியோ ரெகார்டிங் சேவையுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் 16 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபீ கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி
நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அத்துடன் இதில் ப்ளூடூத் 5.0 மற்றும் எம்ஐஎம்ஒ தொழில்நுட்பம், வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆர்.ஜி.பி லைட்டிங் ஸ்ட்ரிப்ஸ்களும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விலை & விற்பனை
நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் பிரத்தியேகமாக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்குக் களமிறக்கப்படும் என்று நுபியா நிறுவனம் தெரிவித்துள்ளது. நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வேரியண்ட் மாடல் சுமார் ரூ.33,500 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனின் 12ஜிபி வேரியண்ட் ரூ.40,000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications