மிரண்டு போவீங்க.. 200MP கேமரா.. OLED டிஸ்பிளே.. 7100mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த கேமிங் பிரியர்களையும் மிரளவிடும்படியான பீச்சர்களுடன் நுபியா நவிஎக்ஸ் அல்ட்ரா (nubia NaviX Ultra) ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. 200 எம்பி கேமரா, ஓஎல்இடி டிஸ்பிளே, 7100mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுத்து இருக்கிறது. இந்த நுபியா நவிஎக்ஸ் அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை பார்க்கலாம்.
கேலக்ஸி கூலிங் சிஸ்டம் (Galaxy Cooling System), 7100 எம்எம்² 3-டைமென்ஷனல் வேப்பர் சேம்பர் (Three Dimensional Vapor Chamber) கொண்ட மாடலாக இந்த நுபியா நவிஎக்ஸ் அல்ட்ரா இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட்டுடன் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளேவை கொடுத்து இருக்கிறது.

நுபியா நவிஎக்ஸ் அல்ட்ரா அம்சங்கள் (nubia NaviX Ultra Specifications): 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 64 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெலிலைசேஷன் கிடைக்கிறது. டெலிபோட்டோ மேக்ரோவிலும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா உள்ளது.
6.78 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை கொடுத்து இருக்கிறது. 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் டிசிஐ பி3 கலர் காமட் (Color Gamut) கிடைக்கிறது. 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், டிசி டிம்மிங் (DC Dimming) மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நுபியா நவிஎக்ஸ் அல்ட்ரா ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் நெபுளா ஏஐஓஎஸ் 2 (Nebula AIOS 2) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்களுடன் இந்த நுபியா நவிஎக்ஸ் அல்ட்ரா வெளியாகி இருக்கிறது. ஆடியோவில் அல்ட்ரா பிரீமியம் காட்டி இருக்கிறது. டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers), டிடிஎஸ்:எக்ஸ் அல்ட்ரா (DTS:X ULTRA) மற்றும் மூன்று மைக்குகள் கிடைக்கின்றன.
90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7100mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. 50W வயர்லெஸ் சார்ஜிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியுடன் 7.62 எம்எம் தடிமன் மற்றும் 208 கிராம் எடை கொடுத்துள்ளது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.85,000 பட்ஜெட்டிலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.92,000 பட்ஜெட்டிலும் உள்ளது.
மேலும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி மாடலின் விலை ரூ.1,07,000 பட்ஜெட்டிலும் இருக்கிறது. ட்ரீம் (Dream), ப்ளூ (Blue), பிளாக் (Black) மற்றும் ஒயிட் (White) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இப்போது, சீன மார்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. மற்ற மார்கெட்களில் விரைவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
