Home
Mobile

என்1 லைட் : ரூ.6,999/-க்கு இவ்வளவு அம்சங்கள் கொஞ்சம் அதிகம் தான்.!

வடிவமைப்பு வாரியாக, நுபியா என்1 லைட் மெட்டல் முனைகளை கொண்ட ஒரு மெல்லிய வடிவமைப்பை பெற்றுள்ளது. கைரேகை ஸ்கேனர் சாதனத்தின் பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ளது.

By Muthuraj

மிகவும் எதிர்பார்த்தபடி, நூபியா இந்தியா நிறுவனம் இந்தியாவில் அதன் என்1 லைட் ஸ்மார்ட்போனைஅறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய சந்தையில் இந்த நுபியா என்1 லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999/- என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் இக்கருவி அமேசான் இந்தியா வழியாக பிரத்தியேகமாக கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போன் இ -காமர்ஸ் தளத்தில் திங்கள் (இன்று) கிழமை 12.00 மணி முதல் விற்பனைக்கு கிடைக்கும். ரூ.7000/- பட்ஜெட் கொண்ட பயனர்களுக்கு இக்கருவி என்னென்ன அம்சங்களை வழங்குகிறது என்று பார்த்தால்..

மெல்லிய வடிவமைப்பை பெற்றுள்ளது

மெல்லிய வடிவமைப்பை பெற்றுள்ளது

இந்த கருவியின் ஒரு பெரிய சிறப்பம்சமாக ஒரு கைரேகை ஸ்கேனிங் ஆதரவு, மென்மையான ஒளி முன்பக்க ஃபிளாஷ் கொண்ட கேமரா மற்றும் 3000எம்ஏஎச் பேட்டரி திகழ்கிறது. வடிவமைப்பு வாரியாக, நுபியா என்1 லைட் மெட்டல் முனைகளை கொண்ட ஒரு மெல்லிய வடிவமைப்பை பெற்றுள்ளது. கைரேகை ஸ்கேனர் சாதனத்தின் பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ளது, கேமராவிற்கு கீழே உள்ளது.

0.3 விநாடிகளில்

0.3 விநாடிகளில்

அது ஸ்மார்ட்போனை 0.3 விநாடிகளில் திறக்க உதவும் என்று நிறுவனம் கூறுகிறது. கருவியின் ஸ்பீக்கர்கள் பின்னால் அமைந்துள்ளது மற்றும் பவர் மற்றும் வால்யூம் பொத்தான்கள் வலது விளிம்பில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3.5மிமீ ஆடியோ ஜாக் ஒன்றும் ஸ்மார்ட்போனில் இடம்பெறுகிறது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

அம்சங்களை பொருத்தமட்டில் நுபியா என்1 லைட் ஆனது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ அவுட் ஆப் தி பாக்ஸில் இயங்குகிறது மற்றும் அசல் நுபியா என்1 போலவே 5.5 அங்குல டிஸ்ப்ளே கொண்டுள்ளது, ஆனால் திரை தீர்மானமானது முழு எச்டி 1080x1920 பிக்சல்களில் இருந்து 720x1280 பிக்சல்கள் என்று குறைக்கப்பட்டுள்ளது.

ரேம்

ரேம்

இந்த ஸ்மார்ட்போன் ஒரு 64-பிட் 1.25 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மீடியா டெக் எம்டி6737 செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 2ஜிபி ரேம் கொண்டு வருகிறது. 16 ஜிபி உள்ளடிக்கிய சேமிப்புடன் மைக்ரோ ஸ்லாட் (32 ஜிபி வரை) வழியாக விரிவாக்கம் செய்யும் ஆதரவும் கொண்டுள்ளது.

கேமரா

கேமரா

ஒளியியல் அடிப்படையில், இக்கருவி ஒரு மெல்லிய ஒளி ப்ளாஷ் ஆதரவு மற்றும் கேமரா பியூட்டி பில்டர் கொண்ட முன்பக்க இரட்டை எல்இடி பிளாஷ் கொண்டுள்ளது மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்கம் மற்றும் 8 எம்பி பின்பக்க கேமரா கொண்டுள்ளது.

4ஜி வோல்ட்

4ஜி வோல்ட்

இணைப்பு விருப்பங்களை பொருத்தமட்டில் 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், ப்ளூடூத், வைஃபை மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் 24 மணி நேர பேச்சு நேரம் வரை வழங்கும் வண்ணம் மதிப்பிடப்பட்ட ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. அளவு பரிமாணங்களில் 153x77.5x8.4 மிமீ மற்றும் 171 கிராம் எடையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nubia N1 lite Launched in India at Rs. 6,999: Release Date, Specifications, and More. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X