இந்தியா : 6ஜிபி ரேம் உடன் நுபியா இசெட்17 மினி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
நுபியா இசெட்17 மினி பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 653 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 6.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது.
நுபியா நிறுவனம் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட நுபியா இசெட்17 மினி என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம். மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நுபியா இசெட்17 மினி ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.21,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

5.2-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1920-1080)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 6.0:
நுபியா இசெட்17 மினி பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 653 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 6.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த நுபியா இசெட்17 மினி ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி டூயல் ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2950எம்ஏஎச்:
நுபியா இசெட்17 மினி ஸ்மார்ட்போனில் 2950எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications