6ஜிபி ரேம் & ஸ்னாப்டிராகன் 620 செயலி உடன் வெளிவரும் புதிய நுபியா.!
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது, இதன் வடிவமைப்புக்கு தனிகவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நுபியா நிறுவனம் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி நுபியா நிறுவனம் இப்போது நுபியா என்எக்ஸ்591ஜே என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள மிகமுக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் 6ஜிபி ரேம் மற்றும் ஸ்னாப்டிராகன் 620 எஸ்ஒஎஸ் செயலி இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

டிஸ்பிளே:
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது, இதன் வடிவமைப்புக்கு தனிகவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குவால்காம்:
நுபியா என்எக்ஸ்591ஜே பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ள ரியர் கேமரா பொறுத்தவரை 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது, அதன்பின் முன்புற கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது எனக் கூறப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:
ப்ளூடூத், வைபை, என்எப்சி, ஏ-ஜிபிஎஸ், வோல்ட், யுஎஸ்பி போன்ற இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில்இடம்பெற்றுள்ளது.

3630எம்ஏஎச்:
இந்த ஸ்மார்ட்போனில் 3630எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இடம்பெற்றுள்ளது எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications