Home
Mobile

ஆஹா தலைவன் வந்துட்டான் டா.. மிட் பட்ஜெட்ல ஃபிலிப் போன்.. nubia Flip 2 விலையை பாருங்க.. உடனே வாங்க தோணும்..

நுபியா (Nubia) நிறுவனம் புதிதாக நுபியா ஃபிலிப் 2 (nubia Flip 2) என்ற ஸ்லிம் ஃபிலிப் மாடல் ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. ஜப்பானில் (Japan) அறிமுகம் செய்யப்படும் nubia நிறுவனத்தின் இரண்டாவது ஃபிலிப் போன் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய nubia Flip 2 ஸ்மார்ட்போனில் பல அட்டகாசமான அம்சங்களை நிறுவனம் பேக் செய்து பட்ஜெட் விலையில் (budget price) அறிமுகம் செய்துள்ளதனால், இதன் மீது உலக மக்களின் பார்வை பதிந்துள்ளது. இந்த போனின் விலை என்ன? இதில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்ன? என்பதை பார்க்கலாம்.

நுபியா ஃபிலிப் 2 (nubia Flip 2) ஸ்மார்ட்போன் சாதனம் பார்ப்பதற்கே மிகவும் ஸ்லிம் ஆன தோற்றத்தில் காணப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.9" இன்ச் அளவு கொண்ட மெயின் டிஸ்பிளே மற்றும் 3" இந்த அளவு கொண்ட வெளிப்புற டிஸ்பிளேவை நுபியா நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த இரண்டு டிஸ்பிளேக்களையும் நிறுவனம் OLED டிஸ்பிளேவாக வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஹா தலைவன் வந்துட்டான் டா.. மிட் பட்ஜெட்ல ஃபிலிப் போன்..

ஆஹா nubia Flip 2 தலைவன் வந்துட்டான் டா.. மிட் பட்ஜெட்ல ஃபிலிப் போன்:
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், 6.9" இன்ச் அளவு கொண்ட 2790 x 1188 பிக்சல் (pixels) அடங்கிய FHD+ AMOLED டிஸ்பிளேவை இந்த போன் கொண்டுள்ளது. இந்த மெயின் டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) உடன் இயங்கும் ஃபோல்டபில் டிஸ்பிளேவாக வருகிறது. மறுபுறம், வெளிப்புறத்தில் இருக்கும் 3" இன்ச் அளவு கொண்ட 422 x 682 உடைய AMOLED டிஸ்பிளேவை இந்த போன் கொண்டுள்ளது.

இந்த நுபியா ஃபிலிப் 2 (nubia Flip 2) ஸ்மார்ட்போன் சாதனம் 4nm மீடியாடெக் டைமென்சிட்டி 7300X சிப்செட் (MediaTek Dimensity 7300X) உடன் வருகிறது. இந்த புதிய நுபியா ஃபிலிப் 2 (nubia Flip 2) சாதனம் 6GB LPDDR4X ரேம் (RAM) உடன் 128GB UFS 3.1 ஸ்டோரேஜ் (storage) அம்சத்துடன் வெளிவந்துள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 (Android 14) இல் இயங்குகிறது.

நுபியா ஃபிலிப் 2 (nubia Flip 2):
இது டூயல் நானோ சிம் (Dual nano SIM) மற்றும் eSIM வசதியை ஆதரிக்கிறது. இதன் கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இது 50MP மெயின் கேமரா உடன் 2MP டெப்த் சென்சார் உடன் LED பிளாஷ் கொண்ட டூயல் ரியர் கேமரா (dual rear camera) அம்சத்தை பெறுகிறது. முன்பக்கத்தில் 32MP செல்பி கேமராவை (selfie camera) பெறுகிறது.

இந்த நுபியா ஃபிலிப் 2 (nubia Flip 2) ஸ்மார்ட்போன் சாதனம் 4300mAh கொண்ட பேட்டரி உடன் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. இது வெறும் 55 நிமிடங்களில் இந்த சாதனத்தை முழுமையாக சார்ஜ் செய்கிறது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (finger print scanner) உடன் வருகிறது. இது IPX2 / IP4X ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதில் AI அசிஸ்டன்ட் அம்சமும் உள்ளது.

நுபியா ஃபிலிப் 2 விலை (nubia Flip 2 Price):
புதிய நுபியா ஃபிலிப் 2 (nubia Flip 2) பிளாக் (black), வைட் (white) மற்றும் ப்ளூ (blue) நிறத்துடன் வருகிறது. இதன் விலை $411 டாலர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 35, 560 ஆகும். இந்த சாதனம் தற்போது ஜப்பான் சந்தையில் முதலாவதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மற்ற சந்தைக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
nubia Flip 2 Mobile Launched In Japan Check Indian Price and Specification Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X