Home
Mobile

யாரு சாமி அவன்.. 24GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. 4325mAh பேட்டரி.. AI கேமரா.. 33W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

ஃபிளிப் போன் மார்கெட்டே மிரளும்படியான பட்ஜெட்டில் டூயல் ஓஎல்இடி டிஸ்பிளே (இன்னர்/அவுட்டர்), 24 ஜிபி ரேம், 4325mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், ஏஐ பீச்சர்களுடன் டூயல் கேமரா சிஸ்டம் மட்டுமல்லாமல், ஏரோ ஸ்பேஸ் அலுமினியம் ஃபிரேமுடன் நுபியா ஃபிளிப் 2 5ஜி (Nubia Flip 2 5G) களமிறங்கி இருக்கிறது. ஏஐ ரியல்-டைம் டிரான்ஸ்லேட், ஏஐ மேஜிக் போட்டோ போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த நுபியா ஃபிளிப் 2 5ஜி போனின் முழு பீச்சர்கள் இதோ.

நுபியா ஃபிளிப் 2 5ஜி அம்சங்கள் (Nubia Flip 2 5G Specifications): ஃபிளிப் மாடலாக இருப்பதால் ஏரோ ஸ்பேஸ் அலுமினியம் ஃபிரேம் (Aerospace Aluminum Frame) கிடைக்கிறது. ஸ்க்ராட்ச் ப்ரூப் கொடுக்கும்படியான ஸ்பார்கிளிங் சாண்ட் கிரிஸ்டல் (Sparkling Sand Crystal) டிசைன் கொண்ட பேக் பேனல் கிடைக்கிறது. அன்போல்டு செய்தால் வெறும் 7.2 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது.

யாரு சாமி அவன்.. 24GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. 4325mAh பேட்டரி மாடல்!

லைட்-வெயிட்டில் 193 கிராம் எடை உள்ளது. நைட் பிளாக் (Night Black) மற்றும் லைலாக் பர்ப்பிள் (Lilac Purple) கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஃபிளிப் போனில் 6.9 இன்ச் (2790 x 1188 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த போல்டபிள் டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

மேலும், 1200 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PMW டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. இதுபோக 3 இன்ச் (422 x 682 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த அவுட்டர் டிஸ்பிளேவை ஆல்வேஸ்-ஆன் மோடில் பயன்படுத்தலாம். ஆகவே, கிளாக், 3டி பெட் கிராபிக்ஸ் போன்றவற்றை செட் செய்து கொள்ளலாம்.

நியோவிஷன் ஏஐ போட்டோகிராபி (Neovision AI Photography) சப்போர்ட் கொண்ட டூயல் கேமரா சிஸ்டம் (Dual Camera System) கிடைக்கிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா (சூப்பர் கியூபிடி) + 2 எம்பி டெப்த் லென்ஸ் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. 2 டிஸ்பிளேக்களிலும் போட்டோ ப்ரீவியூ கிடைக்கிறது. ஃபிளிப் மாடலாக இருப்பதால் டிவி மோட் (DV Mode) உள்ளது.

டி-விடிஜி டெக்னாலஜி (D-VTG Technology) கொண்ட சூப்பர் நைட் ஷாட் (Super Night Shot) சப்போர்ட் கிடைக்கிறது. ஏஐ லைட்னிங்-ஃபாஸ்ட் ஷாட் (AI Lightning Fast Shot), ஏஐ மேஜிக் போட்டோ (AI Magic Photo), ஏஐ போட்டோ சர்ச்ச் (AI Photo Search), ஏஐ போட்டோ அன்பிளர் (AI Photo Unblur) மற்றும் ஏஐ மேஜிக் எரைசர் (AI Magic Eraser) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.

இதுபோக ஏஐ வால்பேப்பர் ஜென்ரேட்டர் (AI Wallpaper Generator), ஏஐ ரியல் டைம் டிரான்ஸ்லேட் (AI Real-time Translate) போன்ற பீச்சர்களும் வருகின்றன. இந்த நுபியா ஃபிளிப் 2 5ஜி போனில் ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7300எக்ஸ் (Octa Core 4nm MediaTek Dimensity 7300X) சிப்செட் மற்றும் மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

ஆண்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் IP42 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 4325mAh பேட்டரி கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் (12 ஜிபி விர்ச்சுவல்) + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வருகிறது. இதில் 8 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.64,050ஆக இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nubia Flip 2 5G With 24GB RAM 50MP Camera 4325mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X