Home
Mobile

செம ஸ்டைலா இருக்கு.. IP69K ரேட்டிங்.. AMOLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. எந்த போன்?

நுபியா நிறுவனம் தனது புதிய நுபியா ஏர் (nubia Air) மாடலை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம், 50எம்பி கேமரா, ஐபி69 ரேட்டிங், 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய நுபியா ஏர் போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

நுபியா ஏர் அம்சங்கள் (nubia Air Specifications): 6.78-இன்ச் 1.5கே அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா பிளாஸ் 7ஐ பாதுகாப்பு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

செம ஸ்டைலா இருக்கு.. IP69K ரேட்டிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த போன்?

குறிப்பாக யுனிசாக் டி8300 (UNISOC T8300) ஆக்டா-கோர் சிப்செட் வசதியுடன் நுபியா ஏர் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. அதேபோல் மாலி - ஜி57 எம்பி2 ஜிபியு (Mali-G57 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது. ஆகவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். அதாவது மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும் இந்த புதிய போன்.

AI பெர்பார்மென்ஸ் என்ஜின் வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 15 (Android 15)மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.

IP68, IP69, IP69K தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் நுபியா ஏர் போன் வெளிவந்துள்ளது. 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4 எல்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, குளோனாஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய நுபியா போனில் உள்ளன.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + Auxiliary லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் நுபியா ஏர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளது.

டைனாமிக் இமேஜஸ் (Dynamic Images), ஏஐ ஸ்போர்ட் சினாப்சாட் (AI Sport Snapshot), ஆன்டிஷேக் (Anti-shake), ஏஐ மேஜிக் போட்டோஸ், ரியல் டைம் டிரான்ஸ்லேஷன் (Real time translation), டூயல்-மைக் ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற அம்சங்களும் போனில் உள்ளன.

செம ஸ்டைலா இருக்கு.. IP69K ரேட்டிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த போன்?

5000mAh பேட்டரி உடன் நுபியா ஏர் போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட நுபியா ஏர் ஸ்மார்ட்போனின் விலை USD 279 (இந்திய மதிப்பில் ரூ.24,595)-ஆக உள்ளது. குறிப்பாக இந்த போன் டைட்டானியம் பிளாக், ஸ்ட்ரீமர் பிளாக் மற்றும் டைட்டானியம் டெசர்ட் நிறங்களில் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
nubia Air with AMOLED display launched in Europe: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X